districts

img

சாலையில் கம்பீரமாக உலாவிய புலி

உதகை, டிச.9- முதுமலை புலிகள் காப் பகத்தில் இரவு நேரம் சாலை யில் நடந்து சென்ற புலியை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம், முது மலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த  வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த  மழை காரணமாக வனப் பகுதி முழுவதும் பசுமை யாக காட்சியளிக்கிறது. இத னால், யானை, புலி உள் ளிட்ட வனவிலங்குகள் அவ் வப்போது சாலையோரங்க ளில் உலா வருவதும் சாலையை கடந்து செல்வ தும் அதிகரித்துள்ளது. இந் நிலையில், முதுமலை புலி கள் காப்பகத்தில் அமைந் துள்ள மச்சான்குடி பகுதி யில் செவ்வாயன்று இரவு நேரத்தில் புலி ஒன்று சாலை யில் கம்பீரமாக உலா வந்து சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணி கள் புலியை கண்டு ரசித்த தோடு மட்டுமல்லாமல் வீடியோ பதிவு செய்து வெளி யிட்டுள்ளனர். அது தற்போது சமூக வளைதளங்களில் வைராலாகி வருகிறது.