districts

img

குரல்குட்டை அருகே குடியிருப்பு பகுதியில் புத்துயிர் பெற்ற பூங்கா

உடுமலை டிச.10 - உடுமலை தாலுகா குரல்குட்டை சந் தோஷ் கார்டன் குடியிருப்பில் பராமரிப்பின்றி  இருந்த பூங்கா தன்னார்வ அமைப்பின் உதவி யால் புத்துயிர் பெற்றுள்ளது. உடுமலை  ஒன்றியத்திற்கு உட்பட்டது குரல்குட்டை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட் பட்ட சந்தோஷ் கார்டன்  குடியிருப்பில் நூற் றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற னர். இங்கு பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட காலி யிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது.

மேலும், ஊராட்சி சார்பில் நடப் பட்ட மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் உண்டு விட்டது. இந்நிலையில், உடுமலையை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ’மரங்களுடன் நாம்’ எனும் தன்னார்வ அமைப் பிடம் பூங்கா பராமரிப்புக்கு உதவுமாறு ஊராட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக் கப்பட்டது.

இதையடுத்து பூங்கா இடத்தை ஆய்வு  செய்த தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள்,  அங்கு பொக்லைன் மூலம் நிலத்தை சுத்தப்ப டுத்தி 10 அடிக்கு ஒரு மரம் வீதம் சுமார் 150  நாற்றுகள் நடுவதற்கு திட்டமிட்டனர். மேலும்  ஆடு, மாடுகளிடமிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்க  கம்பி வேலி அமைக்கவும் முடிவு  செய்தனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று  வந்த பணிகள் தற்போது நிறைவடைந்தது. மேலும் திங்களன்று மரக்கன்றுகள் நடும் பணி  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சுரேஷ்கு மார் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்  ஆனந்தவேணி பன்னீர்செல்வம், மரங்களு டன் நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், குடியிருப்போர் சங்க நிர்வாகி  நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் புங்கன், வேம்பு, நாவல், பலா, கொய்யா, அரசன், மகிழம் உள்ளிட்ட  150  கன்றுகள் நடப்பட்டது. இப்பணியில் தன் னார்வ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்ட தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், சுய நலமே மேலோங்கி உள்ள  இன்றைய  சூழலில் மரங்களுடன் நாம் என்ற அமைப் பின் சார்பில் இளைஞர்கள் சமூக பணிகளில்  அக்கறை செலுத்துவது மிகவும் வரவேற்கக் கூடியது. இந்த அமைப்பின் சார்பில் ரூ.1.50  லட்சம் செலவில் பூங்காவுக்கு கம்பி வேலி  அமைத்தும், மரக்கன்றுகள் நட்டும், பூங்கா வுக்கு கதவுகள் அமைத்தும் தரப்பட்டுள் ளது. விரைவில் மரங்களுக்கு சொட்டுநீர் பாசனமும் செய்து தர இசைந்துள்ளனர். ஊராட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கிறோம் என் றனர். தன்னார்வ அமைப்பின் பணியினை வட்டார வளர்ச்சி அலுவலரும் பாராட்டி னார்.