உடுமலை, டிச.8- மடத்துக்குளம் பகுதியில் 2 ஆயி ரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகிய நிலை யில், சேதம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகாவில் கடந்த 40 நாட்களுக்கு முன்பாக நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் விளைநிலத்தில் கருகியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத் தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரி வித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கா மல், வேளாண்துறை அதிகாரிகள் விவ சாயிகள் மீது குற்றம்சாட்டி வருகின்ற னர். இதனைக் கண்டித்து வெள்ளி யன்று மடத்துக்குளம் வேளாண்மைத் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தன், மடத்துக்குளம் தாலூகாச் செயலாளர் ஆர்.வி.வடிவேல், தமிழ்நாடு விவசாயி கள் சங்க நிர்வாகி எம்.எம்.வீரப்பன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தயானத்தன், போஸ் உள் ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஞாயி றன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். விவசாயிகள் மீது குற்றம்சாட்டு வதை கைவிட்டு, பாதிக்கபட்ட விவ சாயிகளின் விளைநிலங்களை முறை யாக ஆய்வு செய்ய வேண்டும். விவ சாயிகள் பயன்படுத்திய உரம் அல்லது பூச்சி மருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கபட்ட விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, நெற்பயிர்கள் கருகி உள்ளதை ஆய்வு செய்து, உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி, திங்களன்று (இன்று) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப் பட்ட விவசாயிகளுடன் முற்றுகை போராட் டம் நடைபெற உள்ளதென, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறி வித்துள்ளனர்.