மயிலாடுதுறை, ஜன.17- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் டி. மணல்மேடு கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 25 ஆவது ஆண்டு பொங்கல் விழா திங்களன்று நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் கிளை செயலாளர் வி.எஸ்.எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். காலை முதல் நடை பெற்ற சிறுவர்கள், இளை ஞர்கள், பெரியவர்களுக் கான விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், வாலிபர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர்கள் பி. சீனிவாசன், ஏ.ரவிச்சந்திரன், மாநில துணை செயலாளர் சரவணதமிழன், மாவட்ட செயலாளர் ஏ.அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பி னர் ஆனந்தி, மாவட்ட தலை வர் ஐயப்பன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி. சிம்சன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ரோ ஆகியோர் பரிசு களை வழங்கி பாராட்டினர். மேலும் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை உறுப்பினர்கள், கிராம நாட் டாண்மை, பஞ்சாயத்தார் கள், கிராம வாசிகள் கலந்து கொண்டனர். முன்னதாக டி.மணல் மேடு கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதை பாராட்டி, கே.சாமுவேல்ராஜ் சான்றி தழ் வழங்கி கௌரவித்தார்.