districts

மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 16-  

    தஞ்சை மாவட்டத்தில் 9 இடங்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு  செய்வதற்கு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிவிக் கப்பட்டு, பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக நியாய விலைக் கடை கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு,  அதனை முகாம் அமைத்து பதிவு செய்வ தற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக இல்லம் தேடிக் கல்வித் திட்ட  தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர். 500 விண்ணப்பதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர், ஒரு உதவியாளர் நிய மிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பொறுப்பா ளராக கிராம நிர்வாக அலுவலரும் நிய மிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும், அருகில் உள்ள அரசுக்  கட்டிடங்களில் இதற்காக முகாம் அமைத்து தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பதிவு  செய்ய உள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும்  தன்னார்வலர்களுக்கு தாலுகா அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

     அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, பூத லூர், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட 9 தாலுகாக்களிலும் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.  

    தஞ்சாவூர் தாலுகாவில் உள்ள தன்னார்வ லர்களுக்கு, தஞ்சை மாநகராட்சி அலுவ லக வளாகத்தில்  மாவட்ட வருவாய் அலு வலர் (பொ) செந்தில்குமாரி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனி வேல் முன்னிலையில் இந்தப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் விளக்கம் அளித்த னர்.

    இதற்காக தன்னார்வலர்களுக்கு தனி யாக செயலியும் அளிக்கப்பட்டு பதிவு செய்யப் பட உள்ளது. இப்பயிற்சி கடந்த 3 நாட்களாக  அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை யில் 100, மாலையில் 100 என 200 தன்னார்வ லர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. ஜூலை 24 அன்று முதல் விண்ணப்பங் களை பதிவு செய்யும் முகாம் நடைபெறு கிறது.