districts

img

வெறிச்சோடிக் கிடக்கும் தொட்டியம்பட்டி உழவர் சந்தை செயல்பாட்டிற்கு வருமா?

பொன்னமராவதி, டிச.25 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பேரூராட்சி  அளவிலான உழவர் சந்தை ரூ.60 லட்சம் செல வில் தொட்டியம்பட்டி ஊராட்சியில் அமைக்கப் பட்டது. இது, கடந்த 2023 நவ. 4 அன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதியால் திறந்து  வைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டுமே வியாபாரம் செய்து  வந்த ஒன்றிரண்டு விவசாயிகளும் பொருட் களை வாங்க மக்கள் வராததால் அவர்களும் வியாபாரம் செய்வதில்லை. இதனால் கடந்த  ஒரு வருடமாக வெறிச்சோடி கிடக்கும் உழவர்  சந்தையில் பணியாளர்கள் மட்டும் இரண்டு பேர் வந்து செல்கின்றனர். மேற்கண்ட சந்தை மக்களுக்கும், விவசா யிகளுக்கும் பயன்படும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்  கட்டமாக வாரம் இரு முறை கூடும் பொன்னம ராவதி வாரச்சந்தைக்கு விவசாய உற்பத்தி பொருட் களை கொண்டுவரும் விவ சாயிகள், பொன்னமராவதி காந்தி சிலை அருகில் வைத்து மொத்த வியாபாரி களிடமும், சில்லறையாக வும் மிகக் குறைந்த விலை யில் விற்பனை செய்கின்றனர்.  அவர்களை உழவர் சந்தைக்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர்  பதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளு டன் உள்ள உழவர் சந்தையை விவசாயிகள் பயன்படுத்தி மகமை கட்டணம் உள்ளிட்ட  எந்த கட்டணமும் இன்றி வியாபாரம் செய்து  முன்னேறலாம் என விவசாயிகளிடமும், குறைவான விலைக்கு தரமான காய்கறிகள் கிடைக்கும் என பொதுமக்களிடமும் அரசு  நிர்வாகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கலைஞரின் கனவு திட்டமான உழவர் சந்தை  பொன்னமராவதியில் சிறப்பாக செயல்பட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.