புதுக்கோட்டை, மார்ச் 5 - மாணவர்கள் படிப்பைத் தாண்டி தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் பேசுகை யில், “வானம் தொட்டுவிடும் தூரம்தான், முயற்சி செய்தால் எதுவும் எளிதாகும். மாணவர்கள் படிப்பைத் தாண்டி தங்க ளின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண் டும், நற்பண்புகளுடன் செயல் பட வேண்டும்” என்றார். மேலும் மாணவ, மாணவி களின் உயர்கல்விக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்ட உதவி கள் குறித்தும் எடுத்து ரைத்தார். பின்னர் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவிற்கு கல்லூரி யின் பொறுப்பு முதல்வர் ஞானஜோதி தலைமை வகித்தார். முன்னதாக முனைவர் ரே.சாந்தகுமாரி வரவேற்க, மாணவியர் பேரவை சயெலாளர் தசீமா பேகம் நன்றி கூறினார்.