districts

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு

திருவாரூர், மார்ச் 5 - இந்தியா முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கியூட் தேர்வை CUET-UG தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் 2025 -க்கான பொது நுழைவுத் தேர்வு தேதி கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  2025 - 2026 ஆம் ஆண்டுக்கான க்யூட்  தேர்வு மே 8 ஆம் தேதி முதல் 01 ஜூன்  வரை நடைபெறும் என தற்காலிகமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கான ஆன்-லைன் விண்ணப்பத்தை மார்ச் 4 முதல் 24 வரை பூர்த்தி செய்து  சமர்ப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக  விண்ணப்பிக்கவும். கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி,  அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி  மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழி களில் இத்தேர்வு நடைபெற உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5  பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம். 3  பாடங்கள் வரை விண்ணப்பிக்க கட்ட ணம் பொது (General-UR) - ரூ.1000,  ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) - ரூ.900, எஸ்சி/எஸ்டி/ மூன்றாம் பாலினம் (Third gender) - ரூ.800. 3 பாடங்களுக்கு மேல் கூடுதலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்க ளுக்கும் கூடுதல் கட்டணம் பொது (General-UR) - ரூ.400, ஓபிசி-என்சிஎல்  (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) -  ரூ.375, எஸ்சி/எஸ்டி/ மூன்றாம் பாலி னம் (Third gender) - ரூ.350 என திரு வாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டு இளங் கலைப் பட்டப் படிப்புகளின் விவ ரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இளம் அறிவியல் – வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், கணிதம், இயற்பியல் பி.எஸ்.சி ஆனர்ஸ் ஆய்வு  4 ஆண்டுகள், இளங்கலை பொருளா தாரம் பி.ஏ.ஆனர்ஸ் ஆய்வு 4 ஆண்டு கள். இளங்கலை இசை, பிபிஏ ஆனர்ஸ்  ஆய்வு 4 ஆண்டுகள், இளங்கலை ஜவுளி பி.எஸ்சி. ஜவுளி தொழில் நுட்ப வியல் பி.எஸ்சி உள்ளிட்ட பட்டப் படிப்பு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்களின்படி, இந்த ஆண்டு முதல் மாணவர்கள் 12 ஆம்  வகுப்பில் எந்த பாடத்திலும் படித்திருந் தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு  எழுதலாம். 12 ஆம் வகுப்பில் படிக்கும் பாடப் பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவ சியம் இல்லை. மாணவர்கள் தாங்கள்  படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு  செய்து கொள்ளலாம் என நடைமுறைப்  படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், க்யூட் தேர்வில் 12  ஆம் வகுப்பு பாடப் பிரிவிற்கு ஏற்ற  பாடங்கள் என்று இல்லாமல், மாண வர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து  அதற்கான தேர்வை எழுதலாம்.  உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை  எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங் களை தேர்வு செய்து, தேர்வு எழுதி னால் அவர் வரலாறு படிக்கலாம். அதே போன்று 12 ஆம் வகுப்பில் வணிக வியல் பாடம் எடுத்து படித்திருந்து இளம்  அறிவியலில், இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது ஏதோ ஒன்று  அறிவியல் பாடம் படிக்க விரும்பி னால், அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி, அந்த பிரிவில் படிக்கலாம். மேலும் விவரங்களை https: //cuet.nta.nic.in/ என்கிற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என  மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.