districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆதார் சிறப்பு முகாம்

பாபநாசம், மார்ச் 5 -  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட  நாயக்கர்பேட்டை, பட்டுக் குடி கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆதாரில் பெயர்  சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், விரல் ரேகை புதுப்பித்தல், மொபைல் எண் இணைத் தல் உள்ளிட்டவை நடந்தன. தஞ்சாவூர் முது நிலை அஞ்சலக கண்கா ணிப்பாளர் தங்கமணி, பாபநாசம் உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் வினோத் கண்ணன் அனு மதியளித்ததன் பேரில், ஆதார் பதிவு அலுவலர் சரவணன் 200 பேரிடம்  ஆதார் பதிவை மேற்கொண் டார். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர், முன்னாள் ஊராட்சி  வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு முகாம் 

தஞ்சாவூர், மார்ச் 5 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில், தஞ்சாவூர் ஆர்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி மாணவர்களின், கிராமப் புற வேளாண் பணி அனு பவத் திட்டத்தின்கீழ், இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.  முகாமில், விவசாயி களுக்கு ரசாயன உரங்க ளுக்கு மாற்றாக இயற்கை மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு, அவற்றின் செயல்முறைகள் பற்றிய தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டன. பஞ்ச கவ்யம், மீன் அமினோ  அமிலம், வேப்பங் கொட்டை சாறு, ஐந்திலை கரைசல், மண்புழு உரம், பசுந்தாள் உரம் போன்ற இயற்கை உரங்களின் முக்கியத்துவம் மற்றும்  அவற்றைப் பயன்படுத் தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும், விவசாயி களின் சந்தேகங்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்தனர். கிராம இளை ஞர்களுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு, மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் உருவாக்குவதை ஊக்கு விக்கும் வகையில் காய் கறி விதைகள் வழங்கப் பட்டன. இதில் கல்லூரி மாண வர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போக்சோவில் ஆசிரியர் கைது

திருவாரூர், மார்ச் 5 - திருவாரூர் அருகே உள்ள மேல்நிலைப் பள்ளி யில் சீனிவாசன் (51) என்ப வர் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர்  அதே பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தை கள் நல அலுவலர் சரண்யா  விசாரணை மேற்கொண் டார். அப்புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிந்து ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவத்தில் ஆறு  மாதத்திற்கு பிறகு எப்ஐஆர்  பதியப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலூனை விழுங்கியதால்  7 மாத குழந்தை உயிரிழப்பு

தஞ்சாவூர், மார்ச் 5 - ஊரணிபுரத்தில் பலூனை விழுங்கியதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 மாத ஆண் குழந்தை இறந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வர் சதீஷ்குமார் (35), இவரது மனைவி சிவகாமி (30).  இவர்களின் 7 மாத ஆண் குழந்தை பிரகதீசன். திங்கள்கிழமை  மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலை யில், திடீரென மயங்கிய விழுந்து, வெகுநேரமாகியும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. அப்போது தாய் குழந்தைக்கு பால் தர முயன்றபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.   இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடலை, ஊருக்கு  கொண்டு சென்றனர். இருப்பினும் குழந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால்,  குழந்தையின் இறப்பு குறித்து அறிய, தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு, குழந்தையின் உடலை  செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனர். அங்கு, குழந்தை யினை உடலை கூராய்வு செய்த போது, குழந்தையின் தொண்டை பகுதியில் பலூன் இருந்தது தெரிய வந்தது.  குழந்தை தவறுதலாக பலூனை விழுங்கியதால் தான் மூச்சுத்  திணறல் ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து, பெற்றோரிடம் குழந்தையின் உடலை ஒப்படைத்தனர்.  திரு வோணம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இணைய குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் போட்டிகள்

அறந்தாங்கி, மார்ச் 5 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெருநாவலூரில் செயல்படும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மும், புதுக்கோட்டை மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப்  பிரிவும் இணைந்து விழிப்புணர்வுப் போட்டிகள் நடை பெற்றன. இதனை கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இணையக் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான இணையக் குற்றங்கள் என இரு பிரிவு களில் ஓவியம், கட்டுரை மற்றும் முழக்கங்கள் எழுதும் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு துறை சார்ந்த மாணவி யர் பலரும் பங்கேற்றனர். புதுக்கோட்டை இணையக் குற்றங்கள் தடுப்பு நிலைய உதவி ஆய்வாளர்கள் செளந்தர் ராஜன், சிவக்குமார் ஆகியோர் போட்டிகளைப் பார்வை யிட்டு மாணவ-மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கினர்.  கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மு.பழனித்துரை  போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

மார்ச் 8-இல் குறைதீர் முகாம் 

தஞ்சாவூர், மார்ச் 5-  தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் 2025 மாதத்திற்கான பொது  விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மார்ச் 8  அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும்  இருப்பின், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில், மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

250 ரூபாய் பந்தயத்தால் வந்த வினை ஜல்லிக்கட்டு காளை முட்டி மாணவர் பலி 

தஞ்சாவூர், மார்ச் 5 - 250 ரூபாய் பந்தயத்தால், ஜல்லிக்கட்டு காளையை அடக்க  முயன்ற போது, மாடு முட்டியதில் 10 ஆம் வகுப்பு மாணவர் பலி யானார். தஞ்சாவூர் அருகே வல்லம், சவேரியார் கோவில் தெருவைச்  சேர்ந்த இசையாஸ் – மேரி கிரேஸி தம்பதியின் மூன்றாவது மகன் திரண்பெனடிக்ட் (15), வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பள்ளிக்கு சென்று விட்டு, திரண்பெனடிக்ட் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த  போது, அற்புதாபுரம் பகுதி தோப்பு ஒன்றில், கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை திரண்பெனடிக்ட் பிடிக்க முயன் றுள்ளார். அப்போது, மாடு நெஞ்சில் குத்தியது. இதில் படுகாய மடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரீ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே திரண்பெனடிக்ட் உயிரிழந்தார். மாணவரின் பெற்றோர் வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு  வரவில்லை என கூறி, அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். அப்போது, ஜல்லிக்கட்டு காளை முட்டியதில், திரண்பெனடிக்ட் இறந்து விட்டதாகவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை தஞ்சாவூர் ஆட்சியர்  முகாம் அலுவலகத்தின் முன்பு, திரண்பெனடிக்ட் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர். பிறகு ஆட்சியரிடம் மாணவ ரின் தாய் மேரி கிரேஸி அளித்த மனுவில், “அற்புதாபுரம் பகுதி யில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன்  உரிமையாளர் மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், எனது மகனிடம் மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன் என  கூறியுள்ளார். இதற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க சென்ற போது, காளை மாடு முட்டி என் மகன் இறந்துவிட்டார். என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளை யின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். மேலும் அரசு எங்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும், தஞ்சாவூர் எம்.எல்.ஏ., நீலமேகத்தை சந்தித்தும் முறையிட்டனர். இது குறித்து வல்லம் காவல்நிலையத்தில் திரண் பெனடிக்ட் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

அரசு இடத்தை ஆக்கிரமித்த  டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம்  மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரியலூர், மார்ச் 5- அரியலூரை அடுத்த மணக்குடியில், ஓட்டக் கோயில் டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வா கம் ஆக்கிரமித்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள் கிழமை மனு அளித்தனர். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி மற்றும் மணக்குடி கிராம மக்கள் அளித்த மனுவில், “இங்குள்ள அரசுக்குச் சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத் தில், காலனித் தெரு மக்கள் கடந்த 70 ஆண்டு களாக விவசாயம் செய்து வந்தனர். இந்நிலை யில், அந்த நிலத்தை ஓட்டக்கோவில் டால்மியா சிமெண்ட் ஆலை நிர்வாகம் அடி யாட்களைக் கொண்டு பொதுமக்களை மிரட்டி, அவர்களுக்கே தெரியாமல் அந்த  நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்து உள்ளனர். இதனை மீட்டு மீண்டும் பொது மக்கள் விவசாயம் செய்திட ஆவன செய்ய  வேண்டும். சுடுகாட்டுக்கு வேறு இடம் வழங்கக் கோரிக்கை... காலனித் தெரு மக்களுக்கு சொந்தமான  சுடுகாடு, இடுகாடு, 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மயானத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், அங்குள்ள ஓடையை கடந்து, செல்ல வேண்டும். மழைக் காலங்களில், இடுப்பளவு தண்ணீரில் சட லங்களை தூக்கிச் செல்ல வேண்டிய நிலை  உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சுடு காட்டை வேறு இடத்துக்கு மாற்றித் தர  வேண்டும். இல்லையென்றால் சுடுகாட்டுக்குச்  செல்ல சாலை வசதியுடன் பாலம் அமைத்துத்  தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.