districts

லால்குடியில் மெய்நிகர் நூலக செயல்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, ஆக.29 - திருச்சி மாவட்டம் லால்குடி கிளை நூலகத்தில், மெய்நிகர் நூலகத்தின் செயல் பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி  வைத்தார். பின்னர், நூலகத்தை பார்வை யிட்டு, நூலகங்களில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 3 நூலகர்களின் வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் பணி நிய மன ஆணைகளை வழங்கினார். இதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவிப்பின்படி மெய்நிகர் நூலகத்தை அமைக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி யில் முதல்முறையாக தொடங்கி வைத்திருக் கிறோம். இது போன்ற புதிது புதிதான தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.  இந்நிகழ்வு மூலமாக ஒரு லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் 26 நூலகங்கள் மெய் நிகர் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக மாணவர்கள் புத்தகத்தை படிக்க சொல் வதை காட்டிலும், இது போன்ற 360 டிகிரி  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படிக்கும்  போது இன்னும் எளிமையாக புரிந்து  கொள்ள முடியும் என்ற நம்பிக்கை யில்தான் இது போன்ற நிகழ்வை உருவாக்கி யுள்ளோம். தமிழ்நாட்டில் 26 நூலகங்கள்  தொடங்கப்படவுள்ளன. இதனை மாண வர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்  குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட நூலக அலு வலர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.