districts

img

பேராவூரணி விளிம்புநிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

தஞ்சாவூர், மார்ச் 8 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கும்  நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் மருத்துவர்  என்.ஓ.சுகபுத்ரா வரவேற்றார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 31 பொதுமக்களுக்கு, நாட்டாணிக்கோட்டை செந்தமிழ் நகரில், ரூ.1,24,744  மதிப்பிலான வீட்டு மனைப் பட்டா வழங்கியும், கடந்த பல ஆண்டுகளாக சாலை  வசதியின்றி இருந்த நரிக்குறவர் காலனி பகுதி க்கு, ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார்ச்சாலையை திறந்து வைத்தும் உரையாற்றி னார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தில் இடம்பிடித்து உள்ளவர்கள் நரிக்குறவர் இன மக்கள். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் வார்த்தையில் இவர்கள் நெறிக்குறவர்கள். அந்தளவுக்கு சிறப்பானவர்கள். எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று, அவர்களது குறைகளை தீர்த்து வையுங்கள் என முதல்வர் உரிமையோடு சொல்கிறார்.  இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்ப டாமல் இருந்த பாதை பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. தற்போது தார்ச்சாலை  அமைக்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அடுத்து அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தை கள் இல்லை என்ற நிலை உள்ளது. நீங்களும் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்” என்றார். பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், திருவை யாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலை வர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், மாவட்ட  ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பேராவூரணி பேரூராட்சி துணை பெருந்தலைவர் கி.ரெ.பழனிவேல் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  கடந்த பல ஆண்டுகளாக பாதை வசதியின்றி, கரடுமுரடான முள்சாலையில் நரிக்குறவர் இன மக்கள் பயணித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் தனிக் கவனத்தின்படி, இப்பகுதியில் உள்ள 10 பேரிடம் நிலத்தை பெற்றப்பட்டு, சுமார்  700 மீட்டர் தூரத்துக்கு, நிரந்தர சாலை அமைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.