districts

img

பெண்களுக்கு நிரந்தர வேலை-ஊதியம் வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூர், மார்ச் 9 - சிஐடியு உழைக்கும் பெண்கள்  ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சர்வ தேச பெண்கள் தினத்தையொட்டி, பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் செல்வி  தலைமை வகித்தார். மாவட்ட இணை  அமைப்பாளர் மணிமேகலை  வரவேற் றார். மாநில ஒருங்கிணைப்பாளர் தன லெட்சுமி, சிஐடியு மாவட்டச் செயலாளர்  அகஸ்டின் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஏ.சுமதி நன்றி கூறினார். ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் விசாகா கமிட்டி அமைத்திட வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களில் குழந்தை கள் காப்பகம், ஓய்வறை அமைக்க வேண்டும்.  அங்கன்வாடி, ஆஷா,  மக்ளை தேடி மருத்துவப் பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரம், கட்டுமானம், தையல் உட்பட அனைத்து முறைசாரா பெண் தொழி லாளர்களுக்கும் 55 வயதில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும். பெண்கள் அதிகமாக பணிபுரியும்  நகராட்சி, உள்ளாட்சி, மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களில் அவுட் சோர்சிங் காண்ட்ராக்ட் விடுவதை கைவிட்டு நிரந்தர பணியாளராக்க வேண்டும். பெண்கள், சிறுமிகள், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பெண்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அமைப்பின் நிர்வாகி கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.