districts

img

டிபிடிஆர் தேசிய பள்ளியில் தீண்டாமை கொடுமை

மயிலாடுதுறை, ஜன.29 - டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தகுதியான ஆசிரிய ருக்கு, தலைமையாசிரியர் பதவி  அளிக்காமல் சாதியப் பாகுபாட்டை  கடைப்பிடிக்கும் பள்ளி நிர்வா கத்தை கண்டித்தும், தொடர் போராட் டங்களை நடத்தியும் கண்டுகொள் ளாத பள்ளிக் கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியினர் புதனன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அமைப்பின் மாவட்டத் தலை வர் ஏ.ஆர்.விஜய் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில  இணைச் செயலாளர் பழ.வாஞ்சி நாதன், மாவட்டச் செயலாளர் சி. மேகநாதன், மாவட்டப் பொருளா ளர் ஏ.நேதாஜி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், பி.மாரியப் பன், ஜி.வெண்ணிலா, சி.விஜய காந்த், கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி, அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்றனர்.                                                      மயிலாடுதுறையில் இயங்கி வருகிற தேசிய மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 18 ஆண்டுகளாக மூத்த  முதுகலை ஆசிரியராக இரா.கலை வாணன் என்பவர் பணியாற்றி வரு கிறார். சென்ற கல்வியாண்டி லிருந்து உதவித் தலைமையாசிரி யர் பணியையும் சிறப்பாகச் செய்து  வருகிறார்.  இந்நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஓய்வு பெற்ற தையடுத்து, அரசு விதிமுறைகளின் படி பணியில் மூத்த முதுகலை ஆசிரியர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால்  விதிகளுக்கு மாறாக அரசு விதி முறைகளை முற்றிலும் மதிக்கா மல், 10 ஆண்டுகள்கூட முதுநிலை  ஆசிரியர் பணியை பூர்த்தி செய்யாத 8 ஆவது நிலையில் இருக்கும் ஒருவருக்கு தலைமை யாசிரியர் (பொறுப்பு) பதவியை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. தீண்டாமையை கடைப்பிடிக் கும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக் கைக்கு பல்வேறு தரப்பினர் கண்ட னம் தெரிவித்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் போராட்டங்களை நடத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட  கல்வித்துறையிடம் முறையிட்டது. அதன் பின்னரும் பள்ளி நிர்வாகம் தனது முடிவை மாற்றாமல் இருந்து வருகிறது. தற்போது பள்ளி துவங்கிய 125 ஆவது ஆண்டினை கொண்டாட உள்ளதாகவும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை தலைமையாசிரியராக நியமித்து எப்படி விழாவை கொண் டாடுவது; பள்ளிக்கு தீட்டு பட்டு விடும்” என பள்ளி நிர்வாகம் வெளிப் படையாகவே பேசி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மயி லாடுதுறை மாவட்டக் குழு தமிழ் நாடு முதலமைச்சர், பட்டியலின ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட  அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு  ஒன்றை அனுப்பியது. மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் நேரிலும், மனு மூலமாகவும் தொடர்ந்து முறையிட்டும் அதிகாரிகள், பள்ளி  நிர்வாகத்தை அழைத்து சாதிய தீண்டாமைக் கொடுமை குறித்து விசாரணை நடத்தி, தகுதியான ஆசிரியருக்கு தலைமையாசிரியர் பதவி அளிக்க நடவடிக்கை எடுக்காமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதனன்று போராட்டத்தை அறிவித்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இதன்பின்னரும் அதிகாரி கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில்  பள்ளி நிர்வாகத்தை அழைக்கா மலேயே தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.  இதை புறக்கணித்து, முன்னணி யினர் ஆட்சியர் அலுவலக வளாகத் தினுள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 2.30 மணி நேரம் தொடர்ந்தது. பின்னர், கோட்டாட்சியர் நேரில் வந்து, “திங்களன்று பள்ளி நிர்வாகத்தை அழைத்து கோட்டாட்சியர் தலை மையில் பேச்சுவார்த்தை நடத்துவ தாக” உறுதியளித்தார். இதனை யடுத்து தற்காலிகமாக போராட்டம்  கைவிடப்பட்டது.