திருச்சிராப்பள்ளி, டிச.25 - திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருவதை மேயர் அன்பழகன், மாநகராட்சி பொறியா ளர்களுடன் புதனன்று ஆய்வு செய்தார். திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையை இணைக் கும் வகையிலும், எதிர்கால போக்குவரத் தினை கருத்தில் கொண்டும் பொதுமக்க ளின் நலன் கருதி, ரூ.34.10 கோடியில் இருவழி பாதையாக பாலம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை மேயர் அன்பழகன், நகரப் பொறியாளர் பி.சிவ பாதம், மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினருடன் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, அதன் விவரங்களை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரை வாக முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் மேயர் அன்பழகன் தெரிவிக்கை யில், “மாரிஸ் பாலப் பணிகள் மாநகராட்சி மூலம் இருபுறமும் நடைபெற்று வருகிறது. 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் பணிகள் ரயில்வே மேம்பாலம் கட்டு மானப் பணி முடிந்தவுடன், மாநகராட்சிகள் பணிகள் நடைபெற்று வரும் இருபுறமும் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரயில்வே துறையில் பாலம் கட்டப்பட்டு 157 ஆண்டுகள் ஆவதால், கனரக வாக னத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. இப்பாலம் பழுதடைந்தும் உள்ளதால், ரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தி யும் அகலப்படுத்தியும் கட்டப்பட்டு வரு கிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீட்டர், அகலம் 20.70 மீட்டர். ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதி 223.75 மீட்டர் நீளமும், 15.61 மீட்டர் அகலமும் உடையது. மேற்கு பகுதி 225 மீட்டர் நீளமும், 15.61 மீட்டர் அகலம் உடையது. தடுப்புச் சுவர்களுடன் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பாலம் இருவழிப் பாதையாக கட்டப் படுவதால் மெயின் கார்டுகேட் பகுதியில் இருந்து தில்லை நகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்கு வரத்து இடையூறு இன்றி சுலபமாக செல்ல முடியும்” என்றார்.