districts

img

குடிநீர், சுற்றுச்சூழல் மாசு குறித்து பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

பாபநாசம், ஜன.11-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த அய்யம்பேட்டையில், பேருந்து நிழற்குடை அருகே, நியூ டவுன், ராயல் டவுன் உள்ளது. இதில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.  இதில் கடந்த ஒரு வார காலத்தில் 3 தினங்களாக குடிதண்ணீர் வரவில்லை. 3 தினங்களாக வரும் குடி தண்ணீரும் சேறு போல் உள்ளது. இதை குடிக்க முடியாமல், குடியிருப்பு வாசிகள் தண்ணீருக்காக தெருத் தெருவாக அலைகின்றனர். இதேபோன்று, ராயல் டவுன் 2 ஆவது தெருவில் வாரத்திற்கு ஒரு நாள்கூட குப்பை அள்ளப்படுவதில்லை. இதனால் சுற்றுச் சூழல் மாசு படுகிறது என்கின்றனர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள். இதில் பேரூராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.