tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி, ஏழை - நடுத்தர மக்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை குறளகம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்  ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, கே. முருகன், வே. ஆறுமுகம், எஸ்.வி. வேணுகோபாலன், வி. தனலட்சுமி, மூத்த தலைவர் எம்.வி. கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள்  ஆர். அருள்குமார், பி.கே. மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.