tamilnadu

இந்திய பெருங்கடலுக்கே வந்து தாக்கிய அமெரிக்கா நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

இந்திய பெருங்கடலுக்கே வந்து தாக்கிய அமெரிக்கா நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுதில்லி, மார்ச் 9 - அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது கொடூரமான யுத்தத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் விருந்தி னராக வந்த ஈரான் கப்பலை இந்திய பெருங்கடலுக்கே வந்து தாக்கி அழித்து, இந்தியாவை அவமானப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு, எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், மேற்காசிய போர் குறித்த தமது நிலைபாட்டைத் தெளிவுபடுத்த வலி யுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொட ரின், முதற்கட்ட அமர்வு ஜனவரி 28  அன்று குடியரசுத் தலைவா் உரையுடன் துவங்கி, பிப்ரவரி 13 அன்று நிறை வடைந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு திங்கட்கிழமை (மார்ச் 9) காலை தொடங்கியது.  அப்போது, மேற்காசிய போர் விவ காரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு அனு மதி மறுத்ததால், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனி டையே, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சில விளக்கங்களை அளித்தார்.  ஆனால், மேற்காசிய போர் விவகாரத்தில் இந்திய தலைமை அமைதி காப்பதாகவும், உறுதியான பிரதமர் தேவை என்றும் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.