திருச்சிராப்பள்ளி, மார்ச் 2 - திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் வழங்கப் பட உள்ளன. இதில் இயல், இசை மற்றும் நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட வுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கர காட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கலி யல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக் கலை மன்றத் தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலை ஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக் கூடாது. இம்மாவட்ட விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து 21.3.2022 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாயில் டொப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.