திருச்சிராப்பள்ளி, ஜன.2- திருச்சி மாவட்டத்தில் 2023-ஆம் ஆண் டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்து வதற்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும் 2023-ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 15 தினங்களுக்கு முன் னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருதுவிடும் போட்டிகளை நடத்தும் விழாக் குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்: 7 நாள்: 21.07.2017-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியினை நடத்த வேண்டும். அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண் டும். அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது, போட்டி நடத்தப்படவேண்டும். அரசாணை வெளியிடப்படாமல் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட கிராமங் களில், போட்டி நடத்துவதற்கு அனுமதி வேண்டுமெனில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதற்கான புகைப்படங்கள், நாளி தழ்களில் வரப்பெற்ற செய்தி, கல்வெட்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் நிறை வேற்றப்பட்ட தீர்மான நகல் போன்ற ஆதா ரங்களுடன் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். போட்டிகளில் பங்குபெறும் காளை யுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவி யாளர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்வ தற்கு அனுமதி வழங்கப்படும். போட்டி களில் பங்கேற்கும் முன்பு காளைகளுக்கு அதன் உரிமையாளர் மருத்துவ பரி சோதனை மேற்கொண்டு சான்றினை சமர்ப் பிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும், விழாவில் பங்கு பெறுவோர் விழா நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற் கொண்டு, ‘‘கொரோனா தொற்று இல்லை’’ என்பதற்கான சான்றினை மருத்துவக் குழு வினரிடம் வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.