ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி இ.பவிதா மாவட்ட அளவிலான திருவள்ளுவர் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.