தைப் பொங்கல் தினத்தை நாம் உழவர்கள் தினமாக கொண்டாடு கிறோம். இந்தியாவில் தீபாவளி தான் பெரிய பண்டிகை என்று முன் நிறுத்தப்பட்டாலும், அந்தப் பண்டிகை ஒரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட மதப்பண்டிகை ஆகும். ஆனால் ஒரு பண்டிகை மதம் சாராமல் அந்தந்த மண்ணின் பண்பாடு சார்ந்து நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது என்றால் அது பொங்கல் பண்டிகையாகத்தான் இருக்கும். தென்னிந்தியாவின் பொங்கல் பழையவை களை நீக்கிவிட்டு புதியவற்றிற்குள் அடியெடுத்து வைக்கும் நாளாகவும், உழைப்பை, அதற்கு உறு துணையாக இருக்கும் கால்நடைகளை, இயற்கை யை வணங்கும் திருவிழாவாக இருக்கிறது. இதைப் போலவே கோதுமை அதிகம் விளையும் பஞ்சாபில் “லோஹ்ரி” என்ற பெயரில் அறுவடைத் திருநாள் இதே நாளில் கொண்டாடப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் “மகர சங்கராந்தி” என்று கொண்டாடப்படுகிறது.
உழைப்பின் அளவீடும் அதன் விளைவுகளும்
இந்தப் பொங்கல் பண்டிகையில் உழைப்பின் மகத்துவத்தை சிலர் நம் இந்திய உழைப்பாளி களுக்கு சொல்லித்தர வந்துள்ளார்கள். ஒருவர் லார்சன் & டுப்ரோ (எல் & டி) தலைவர் எஸ்.என். சுப்ரமணியன். “உலகின் போட்டித் தன்மையை பராமரிக்க இந்திய ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை கள் உட்பட வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்து கொண்டு எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள்” என்று கேட்டுள்ளார். இதே கருத்தை சில மாதங்களுக்கு முன் இன் போசிஸ் நாராயண மூர்த்தி இந்தியப் பண்பாட்டின் சிதைவோடு இணைத்து பேசியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளிலிருந்து நம்(இந்திய) இளை ஞர்கள் விரும்பத்தகாத பழக்கங்களை எடுத்துக் கொள்கிறார்கள். அதை விடுத்து நம் இளைஞர்கள் வாரத்திற்கு 70மணி நேரம் ‘இது எனது நாடு’ என்ற எண்ணத்தில் உழைக்க வேண்டும்” என்று பேசியுள் ளார்.
உலகளாவிய உழைப்பின் போக்குகள்
உலகின் வளர்ந்த நாடுகள் தங்கள் வேலை நேரத்தை கடுமையாக குறைத்து வருகின்றன. உதாரணமாக 19ஆம் நூற்றாண்டின் கடையில் அமெரிக்கர்கள் வாரம் 60மணி நேரம் உழைத்தார்கள். ஆனால் இன்று 33மணி நேரம் மட்டுமே உழைக்கிறார்கள். பிரான்ஸ் 30மணி நேரம், நெதர்லாந்து 27 மணி நேரம் இந்தியாவை விட பெரும் பொருளாதாரம் கொண்ட ஜெர்மனி யர்கள் வாரத்திற்கு 25.6 மணி நேரம் மட்டுமே உழைக்கிறார்கள்.
தொழில்நுட்பமும் மனித வாழ்வும்
தொழிற்புரட்சி ஏற்பட்ட போது வந்த நவீன இயந்திரங்களால் வேகமாக பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தது. அதனால் மனித உழைப்பு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது தான் முதலாளிகள் தங்கள் லாப வெறியால் 14மணி நேர உழைக்க தொழிலாளர் களை நிர்பந்தித்து சுரண்டினார்கள். இது மனித சமூகத்திற்கு விரோதமானது என்று, அதன் மூலம் ஏற்பட்ட புரட்சியே 8மணி நேர வேலையை உலகில் தோற்றுவித்தது.
செல்வப் பகிர்வின் முரண்பாடுகள்
எல்.&டி எஸ்.என்.சுப்ரமணியனின் ஊதியம் ஆண்டிற்கு ரூ.51கோடி. அது அவரின் கடந்த ஆண்டு ஊதியத்தை விட 43.11% அதிகம். ஆனால் எல்.&டி ஊழியர்கள் எல்லோருக்கும் அதே சதவிகித அளவில் ஊதியம் உயர்ந்துள்ளதா என்றால் இல்லை. இது இங்குள்ள எல்லா பெருமுத லாளிகளுக்கும் பொருந்தும்.
வாழ்வின் சமநிலை
உற்பத்தியால் மனித சமூகம் தன் அத்தியாவசி யத் தேவைகளை பூர்த்தி செய்து அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் தனக்கான கலைகளை, இலக்கியங்களை உருவாக்கியது. மனித உறவு களை, உன்னதமான காதலை வளர்த்தெடுத்தது. தனக்கான அற வாழ்வை கட்டமைத்துக்கொண்டது.
வலுவான குரல் எழட்டும்!
இயல்பிலேயே மனித இனம் உழைக்கக் கூடியது தான். அது தான் நம் இயல்பு. அதிலும் இந்திய சமூகம் உழைப்பை கொண்டாடக்கூடிய சமூகம். ஆனால் தேவையைத் தாண்டி செய்யப் படும் உழைப்பு மனித விரோதம். ஆகவே இன்றைய சூழலில் மேலும் உழைப்பு நேரம் குறைக்கப்பட வேண்டும். வரும் மே தினத்தின் குரல்கள் எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக ஏழு, ஆறு, ஐந்து என்று குறைக்கக் கோரும் குரல்களாக எழ வேண்டும். “இன்னும் கொஞ்ச நேரம் கூடுத லாக உழைத்தால் தான் என்ன..?” என்றும் “எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தை பார்ப்பீர்கள்” என்றும் எழும் பெரு முதலாளிகளின் குரல்களுக்கு எதிராக “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..?” என்று இணையரிடம், குழந்தைகளிடம் பாடிக்கொண்டே இன்றைய உழவர் தினத்தை கொண்டாடுவோம்.