உழவர் திருநாளாம் பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல; அது தமிழர் களின் வாழ்வியல் நெறிமுறைகளையும், விவ சாய மரபுகளையும் பிரதிபலிக்கும் கலாச்சார விழா. இந்தியாவின் பல்வேறு பண்டிகைகளில், விவசாயிகள், கால்நடைகள் என அனைத்து உயிர்களையும் கொண்டாடும் தமிழ் மக்க ளின் தனித்துவமான திருவிழா இது. விவசாய சமூகத்தின் வாழ்வியலையும், போராட்டங்களை யும் பிரதிபலிக்கும் விழா இது.
விவசாயமும் வாழ்வியலும்
விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற கிராமத்து மக்க ளின் வாழ்வியல் தத்துவம், இன்றும் நம் நாட்டின் அடிநாதமாக ஒலிக்கிறது. உலகெங்கிலும் பரவி யுள்ள தமிழர்கள், இந்த மண் வாசனை மிக்க பண்டிகையை இன்றும் உயிர்ப்புடன் கொண்டாடி வருகின்றனர். கிராமப்புற பெண்கள் வயல்வெளி களில் நாற்று நடும்போது பாடும் பாடல்கள், அவர்களின் உழைப்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
பொங்கலின் பன்முக பரிமாணங்கள்
போகிப் பண்டிகை: போகிப் பண்டிகை, பழை யன கழிதல் என்ற பெயரில், விவசாய சமூகத்தை சீரழிக்கும் சக்திகளை எதிர்த்து நிற்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. வேளாண் திருத்த சட்டங்கள் போன்ற விவசாயிகளை பாதிக்கும் கொள்கைகளை எதிர்த்து, மக்களை ஒன்றிணைக்கும் நாளாகவும் இது அமைகிறது. தைப்பொங்கல்: வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, வண்ண வண்ணக் கோலங் களால் அலங்கரித்து, புத்தாடை அணிந்து கொண்டாடப்படும் முதல் நாள். மண்பானையில் பச்சரிசி பொங்கலும், கரும்பும், மஞ்சள் குலை யும் வைத்து, சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விழா. இது பாலின சமத்துவத்தையும், சமூக முற்போக்கு சிந்தனை களையும் வலியுறுத்தும் நாளாகவும் கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கல்: விவசாயத்தின் உயிர்நாடி யாம் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் நாள். மாடுகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, கொம்புகளை வண்ணமயமாக்கி, மாலை யணிவித்து கொண்டாடுகின்றனர். ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்துகின்றனர். காணும் பொங்கல் : குடும்பங்கள் ஒன்றி ணைந்து, ஆறு, கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் நாள். புதுமணத் தம்பதிகள் பெரியவர்களின் வாழ்த்துப் பெறும் நாளாகவும் இது அமைகிறது.
தற்கால சவால்களும் தீர்வுகளும்
விவசாயிகளின் நிலை: இன்று தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். நிலமற்ற விவசாயிகள், இரண்டு வேளை உண விற்கே வழியில்லாதவர்கள் என பலர் வாடு கின்றனர். சமீபத்திய வெள்ளப்பெருக்கால் பல லட்சம் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து நிற்கின்றனர். அதிக வட்டிக்கு கடன் வாங்கி, இயற்கை சீற்றங்களால் அதை இழந்து தவிக்கின்றனர். அரசின் பங்கு: தமிழக அரசு வழங்கும் உரிமைத்தொகை ரூ.1000 சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. முதியோர்கள், கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என பலர் ரூ.3000 உதவித்தொகை கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது வர வேற்கத்தக்கதே, ஆனால் அதுவும் இந்த முறை முழுமையாக இல்லை. மேலும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.
எதிர்கால நம்பிக்கையும் தீர்வுகளும்
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கை யுடன், விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
1. வெள்ள பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்குதல்.
2.விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல்.
3.மாதாந்திர உதவித்தொகை ரூ.3000 உறுதி செய்தல்.
4.விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்.
2025ஆம் ஆண்டின் பொங்கல் விழா, அனைத்து மக்களுக்கும் சமத்துவமும், சமூக நீதியும் கிடைக்கும் வகையில் அமைய வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். சமரச மின்றி போராடி, உழவர் பெருமக்களின் வாழ்வு வளம் பெற, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எங்கும் வண்ணக் கொடிகள் பறக்கலாம், ஆனால் விவசாயிகளைப் பாதுகாக்கும் செங் கொடியே நமது அடையாளமாக திகழ வேண்டும். பொங்கல் பண்டிகை வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், விவசாய சமூகத்தின் மீட்சிக் கான விதையாக மாற வேண்டும்.