மயிலாடுதுறை, நவ.20 - மயிலாடுதுறையில் கனமழை பெய்து வரும் நிலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர் கள், பொதுமக்கள் கடும் அவதிய டைந்து வருவதாக இந்திய மாண வர் சங்கம் கூறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக தொ டர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரத்தை ஒட்டி யுள்ள வட்டங்களான தரங்கம்பாடி, சீர்காழி பகுதியில் மாவட்டத்தின் மற்ற வட்டங்களான குத்தாலம், மயிலாடுதுறை பகுதிகள் போன்று இல்லாமல் கூடுதலான மழை பெய்து வருகிறது. அதுவும் திட்டு, திட்டாக கன மழை பொழிவது தொடர்கிறது. கடலோர மாவட்டங்களில் தொ டர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக திருவாரூர், நாகை, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் ஆகிய மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அளிக்கப்படுகிறது. ஆனால் மயிலாடுதுறை மாவட்டத் திலோ கனமழை பெய்தும்கூட விடு முறை அளிக்கப்படாதது அதிருப் தியை ஏற்படுத்துகிறது. நாகை மாவட்டமாக இருக்கும் போதும் சரி, மயிலாடுதுறை மாவட்டமாக இருக்கும்போதும் சரி தலைநகரில் என்ன வானிலை நிலவுகிறதோ, அதனடிப்படையில் மட்டுமே விடுமுறை அறிவிப்பு என்பது தொடர்கிறது. ஆனால் கடற் கரையை ஒட்டிய வட்டமான தரங்கம்பாடியில் கனமழை அதி களவில் பெய்து வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் மழை அளவினை அறியும் மழைமா னியில் முறையாக மழையளவு குறித்த புள்ளி விபரங்கள் அளிக்கப் படுகிறதா? என்ற கேள்வி எழு கிறது. தரங்கம்பாடி வட்டத்தில் புதனன்று அதிகாலை முதலே கன மழையும், பனிமூட்டமும் நிலவிய போதும் விடுமுறை அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நனைந்த வாறே சென்றனர். அதே போன்று மாலையில் மீண்டும் நனைந்தவாறே வீடுகளுக்குச் செல்லும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அந்தந்த தாலு காக்களில் பெய்யும் மழையைப் பொறுத்து வட்டாட்சியர்கள் விடு முறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவதோடு, மழை பெய்யும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆய்வை மேற்கொண் டால்தான் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் நிலை குறித்து அறியலாம் என இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு தெரிவித்துள்ளது.