அரசு ஊழியர் சங்க புதிய நிர்வாகிகள்
கும்பகோணம், நவ.20 - தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் கும்பகோ ணம் வட்ட செயற்குழு கூட்டம், வட்ட துணைத் தலைவர் செல்வம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் துவக்க உரையாற்றினார். மருந்தாளுநர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் விஸ்வேஸ்வரன் சிறப்பு ரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்ட புதிய தலைவராக மதியழகன், வட்டச் செயலாளராக பிர பாகரன், பொருளாளராக கோபிநாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் கவிதா, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் செந்தா மரை ஆகியோர் நிறை வுரையாற்றினர்.
நெற்பயிர்கள் சேதம்
பாபநாசம், நவ.20 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கூனஞ் சேரி, தியாகசமுத்திரம் மற்றும் இதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் நூற்றுக் கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடந் துள்ளது. இந்நிலையில் தளிகை யூர் ஓட்டை வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் செடி, கொடி கள் மண்டி வாய்க்காலில் செல்ல வேண்டிய தண்ணீர் வயல்களில் சென்றதால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரி டப்பட்ட சம்பா, தாளடி நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது. தளிகையூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கதவணை திறக்கப்படாமல் உள்ளதால்தான், தண்ணீர் தேங்கியுள்ள தாக வேதனைப்படும் விவ சாயிகள், கதவணையை உடனே திறந்து, ஓட்டை வாய்க்காலை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகைப்பட கண்காட்சி
அரியலூர், நவ.20 - அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண் காட்சி தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமத் தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டி ருந்தது. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.
இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அறந்தாங்கி, நவ.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவல கத்தில் நவ.21 (வியா ழக்கிழமை) அன்று காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. அது சமயம் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கு மாறு செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் கேட்டுக் கொண்டு உள்ளார்.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு திருவாரூரில் 235 நிவாரண மையங்கள் அமைப்பு
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் திருவாரூர், நவ.20 - திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பால சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜா தெரி விக்கையில், “திருவாரூர் மாவட்டத்தில் 176 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. 235 நிவாரண மையங்களும் ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. மிக அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் ஏதும் கண்டறியப் படவில்லை. 41 அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், 68 மிதமான பாதிப்படையக்கூடிய பகுதிகள், 67 குறைந்த பாதிப்படையக்கூடிய பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கான சாவிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்க ளின் பொறுப்பில் உள்ளது. மிக அதிக கன மழையினால் பாதிக்கப்படும் நேரத்தில் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பவர்சா-452, ஜேசிபி-81, ஜென்செட் -108, நீர் இறைக்கும் மின் மோட்டார் 362 இயங்கும் நிலையில் உள்ளன மற்றும் 2090 மணல் மூட்டைகள் மற்றும் சாக்குகள் கையிருப்பு உள்ளன. மாவட்ட வருவாய்த் துறையின் சார்பில் அனைத்து வட்டாட்சியர்களுக்கும் எதிர்வரும் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும், தலைமை யிடத்தில் தங்கி பணிபுரிய வேண்டுமென வும், கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருவா ரூர் மாவட்ட தலைமையிடத்தில் அமைக்கப் பட்டுள்ள அவசர கால உதவி எண் 1077, 04366- 226623 எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்” என்றார்.
நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ.30 கடைசி நாள்
அரியலூர் நவ.20 - அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வரு மானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலை பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் அக்ரி கல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற நிறு வனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல் (2) பயிருக்கு, அரியலூர் மற்றும் திருமானூர் வட்டாரங்களில் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25 ஆம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் (2) சம்பா பயிருக்கு நவ.30 ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒரு ஏக்கர் நெல் பயி ருக்கு ரூ.573 மட்டும் பிரிமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடை பெற்று வரும் வேளையில் விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது தொடர்பான விப ரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலு வலகத்தை அணுகலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூறுநாள் பணியின் போது மரம் விழுந்ததில் பெண் படுகாயம்
கும்பகோணம், நவ.20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில், விவ சாயத் தொழிலாளர்களின் போராட்டத்தின் பிறகு தற்போது நூறுநாள் வேலை நடை பெற்று வருகிறது. ஆனால் கொத்தங்குடி ஊராட்சி நிர்வாகத்தில் நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு இன்றி, பெண்களுக்கும் கடின மான வேலைகளை கொடுத்து வருகின்ற னர். வேறு வழியின்றி இந்த கடினமான வேலையைச் செய்து வருகின்றனர் பெண்கள். இந்நிலையில் கொத்தங்குடி ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு அருகில் வெட்டி கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த, பெண்களை ஊராட்சி நிர்வாகம் வற்புறுத்தி உள்ளது. தங்களது பொருளாதார சிரமத்தை சீர்செய்வதற்காக, வேறு வழியின்றி பெண்கள் வெட்டிக் கிடந்த மரத்தை அப்புறப் படுத்தும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்த னர். அப்போது பணியிலிருந்த கொத்தங் குடி ஊராட்சி காலனி தெருவைச் சேர்ந்த உலகநாதன் மனைவி மனோன்மணியின் தலையில், அருகில் இருந்த மரம் விழுந்து படுகாயம் அடைந்தார். மயக்கமடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை மேல் சிகிச்சைக்கு பரிந்து ரைத்ததின் பேரில், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் நாகராஜன், ஒன்றியத் தலைவர் நாக முத்து, ஒன்றியச் செயலாளர் செந்தில் மற்றும் ரவி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு, மனோன்மணிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். அப்போது விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் கூறுகையில், “ஊராட்சிகளில் நூறு நாள் வேலைகள் கொடுக்கிற போது, பயனாளிகள் செய்ய முடியாத சில வேலைகளை கொடுப்பதால் இப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான சம்ப வங்கள் நிகழ்கின்றன. இவற்றை தவிர்க்க, முறையான நடவடிக்கையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க அளவீட்டு முகாம்
திருச்சிராப்பள்ளி, நவ.20- திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் அளவீடு செய்து வழங்கப்படவுள்ளன. உதவி உபகர ணங்களை பெறுவதற்கு கீழ்க்காணும் விவரப்படி அளவீடு முகாம் நடைபெறவுள்ளது. அளவீடு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் விவரங்கள் 26.11.2024 (செவ்வாய்) - மேலசிந்தாமணி, அரசு இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, 27.11.2024 (புதன்) - திருவெறும்பூர் அரசு முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, 28.11.2024 (வியா ழன்) - லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, 29.11.2024 (வெள்ளி) - மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங் களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும். 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வசிப்பிடத்திற்குட்பட்ட மேற்காணும் விபரப்படி முகாம் நடைபெறும் நாளன்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் உண்மை ஆவணம் மற்றும் அதன் நகல் மற்றும் புகைப்படம்-2 ஆகியவைகளுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற லாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.
தென்னை விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்
தஞ்சாவூர், நவ.20 - தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநர் ராகினி தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டா ரத்தில் சுமார் 16,586 ஹெக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டு தென்னை காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகள் தென்னை மரங்களை இயற்கை பேரிடர், பூச்சி நோய் பாதித்தால் இழப்பீடு பெற வசதியாக தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மாநில அரசு மானியத்துடன் தென்னை பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் ஆதார் நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம் போன்ற ஆவணங்களுடன் பிரீமியத் தொகையை வங்கி வரைவோலையாக எடுத்து தோட்டக் கலை உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் சேர 4 முதல் 15 வயதுக்குட்பட்ட மரம் ஒன்றுக்கு காப்பீடு தொகை ரூ.900 வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் ஒரு ஆண்டு பிரீமியம் தொகை ரூ.2.25, 2 ஆண்டு பிரீமியம் ரூ. 4.16, 3 ஆண்டு பிரீமியம் தொகை ரூ.5.91 வீதம் கட்ட வேண்டும். தென்னை மரம் 16 ஆண்டு முதல் 60 ஆண்டுக்குள் இருந்தால், மரத்துக்கு காப்பீடு தொகை ரூ.1,750 வழங்கப்படும். இதற்கு பிரீமிய தொகையாக ஒரு ஆண்டுக்கு ரூ.3.50, 2 ஆண்டுக்கு ரூ.6.48, 3 ஆண்டுக்கு ரூ.9.19 வீதம் பிரிமியத்தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்கு நரை தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம்
அரியலூர், நவ.20 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், காலாண்டு தேர்வு தேர்ச்சி அறிக்கை, ஆதார் கார்டு எடுத்தல், எஸ்.எம்.சி தீர்மானம், பள்ளி களுக்கு புதிய கட்டடம் கட்டுதல், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், வலுவிழந்த கட்டடம் இடிக்கப்படு தல், தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு இடை நிற்றல் இல்லாமல் வரவழைத்தல், கலைத் திருவிழா போட்டிகள் நடத்துத்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் சிவாநந்தன், மாவட்ட கல்வி அலுவலர் பால சுப்பிரமணியன், உதவித்திட்ட அலுவலர் சக்கரவர்த்தி, மாவட்ட பள்ளித் துறை ஆய்வாளர் பழனிசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர்கள், 119 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நூலக வாசகர் வட்டம் துவக்க விழா
திருவாரூர், நவ.20 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள அகரதிருமாளம் ஊர்ப்புற நூலகம் சார்பாக நூலக வார விழா மற்றும் வாசகர் வட்டம் துவக்க விழா பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பி.பால்வண் ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக மாவட்ட துணைத் தலைவர் வே.மனோகரன் துவக்க வுரையாற்றினார். பூந்தோட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆர்.சரண்யா நூலகப் பதிவை துவக்கி வைத்தார். அரிமா சங்கம் சார்பாக தலைவர் எஸ்.பி.வேல்முரு கன் முன்னிலையில் 200 மாணவர்கள், நூலக உறுப்பி னர்களாக பதிவு செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பள்ளி கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு புத்தகங்கள், எழுது பொருட்களை நன்னிலம் ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி குண சேகரன், மருத்துவ அதிகாரி டி.லதா ஆகியோர் வழங்கி னர். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.சங்கர் வாசகர் வட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். வாசகர் வட்டத் தலைவராக ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.காசிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை செல்லவிருந்த அங்கன்வாடி ஊழியர்களை வழிமறித்து கைது பெரம்பலூரில் காவல்துறை அராஜகம்
பெரம்பலூர், நவ.20 - தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்ல இருந்த அங்கன்வாடி ஊழியர்களை காவல்துறையினர் பெரம்பலூரில் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரப்புவதற்கு முன்பாக லோக்கல் ட்ரான்ஸ்பர் மற்றும் மாவட்ட ட்ரான்ஸ்பர் வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு மற்றும் இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தரமணியில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற இருந்தது. இதில், கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழரசி தலைமையில் செவ்வாயன்று இரவு 10 மணிக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சென்னை செல்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்களை வழிமறித்து தடுத்து 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்வதற்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.