அரியலூர்/திருச்சிராப்பள்ளி, நவ.20 - பால் கொள்முதல் விலையை உயர்த்திடவும் ஊக்கத்தொகை போனஸ் வழங்க கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வீரசோழபுரம் உள்ளிட்ட கடை வீதிகளின் பேருந்து நிறுத்தத்தில் கறவை மாடுகளுடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் டி.தியாகராஜன், எ.சுந்தரமூர்த்தி, ஆர். சொக்கலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணி வேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாஜலம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, பால் உற்பத்தியா ளர் சங்க மாவட்டத் தலைவர் பி.கிருஷ்ண மூர்த்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல், தமிழ்நாடு பால் உற்பத்தி சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மகாதேவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.பத்து என உயர்த்தி யும், பசும்பால் ரூ.45, எருமை பால் லிட்ட ருக்கு ரூ.54 என நிர்ணயம் செய்ய வேண்டும். பாலுக்கான ஊக்கத்தொகை இதர மாநிலங்களில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 என தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான தீவன ஆலை களை முழுமையாக இயக்கி, மாட்டுத் தீவ னத்தை 50 சதவீத மானிய விலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் வரதராஜன், குமார், சேகர், மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கணேசன், தங்கராசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், ஒன்றியச் செயலா ளர் சத்தியமூர்த்தி, விவசாயத் தொழிலா ளர் சங்க வட்டச் செயலாளர் முருகன், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.முருகன் ஆகியோர் பேசினர்.