நாமக்கல், நவ.22- பள்ளிபாளையம் பகுதியில் ஆழ் துளைக் கிணற்று குடிநீர் சிவப்பு நிற மாக வெளியேறி வருவதால், அப் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் ஏராளமான சாயப்பட்டறை கள் இயங்கி வருகின்றன. விசைத் தறித் தொழில் நிறைந்த பகுதி என்ப தால், சாயப்பட்டறை தொழில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக உள்ளது. சாயப்பட்டறையில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர், சுத்திகரிக்கப் பட்ட பிறகு வெளியேற்றப்பட வேண் டும் என்ற விதி உள்ளது. ஆனால், பெரும்பாலான சாயப்பட்டறை உரி மையாளர்கள் அந்த விதிகளை காற் றில் பறக்க விட்டு, இரவு நேரங்களில் சாக்கடை கால்வாய் மூலமாகவும், மழை பெய்யும் நேரங்களிலும் சாயக் கழிவுநீரை காவிரி ஆற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் காவிரி நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பது குறித்து செய்திகள் வெளியாகும் போதெல் லாம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள், வருவாய்த்துறையினர் குறிப்பிட்ட ஒரு சில சாயப்பட்டறைக ளுக்கு அபராதம் விதிப்பது; சீல் வைப் பது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்கின்றனர். இருந்த போதிலும் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக சாயப்பட்டறைகள் இயங்கி வருகின் றன. இந்நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியிலுள்ள கிணற்றிலிருந்த தண்ணீர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவப்பு நிறத்தில் காணப்பட் டது. இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த குமாரபாளை யம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகா ரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட் டோர் நீர் மாதிரியை சேகரித்து சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்நி லையில், பள்ளிபாளையம் ஆர்.எஸ் சாலையில் வர்த்தக வணிக நிறுவ னங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற் பட்ட வீடுகளில் ஆழ்துளைக்கிணற்று குடிநீர் முழுவதுமாக சிவப்பு நிறத் தில் காணப்படுவது பொதுமக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. ஆர்.எஸ் சாலை, தேவாங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சுற்றிலும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு எந்தவித சாயப்பட்டறையும் செயல் படாத நிலையில், பொதுமக்கள் முழு மையாக பயன்படுத்தும் குடிநீர் சாயம் கலந்து சிவப்பு நிறத்தில் வெளியேறு வது நகராட்சி அதிகாரிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும், இந்த நீரை பருகும் பொதுமக்களுக்கு தோல் வியாதி, அலர்ஜி, உடல் நலக்குறைவு உள் ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகி றது. இதேபோன்று இரண்டு தினங்க ளுக்கு முன்பு பள்ளிபாளையம் அக்ர ஹாரம் ஊராட்சி, ஓடக்காடு கிராமத் தில் சுமார் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்வெளிகளில் சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் தேங்கியது. இதன் காரணமாக நெல்மணிகள் அழுகி பயிர்கள் வீணானது. தேவாங்கபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதை அடுத்து வெள்ளியன்று காலை மீன்கள் செத்து மிதந்தன. தொடர்ந்து பள்ளி பாளையத்தில் சாயக்கழிவு நீர் பல்வேறு இடங்களில் கலப்பதால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத் தும் குடிநீர் விஷத்தன்மை கொண்ட தாக மாறி வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, சாயப்பட் டறை கழிவுகள் வெளியேறுவதால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை வழங்கி, இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.