பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நவ.22- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளியன்று பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை லிட்ட ருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். மானிய விலையில் மாட்டு தீவனங்கள் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், மோளிப்பள்ளி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் மாவட்ட உதவிச்செயலாளர் பூபதி, பொருளாளர் சங்கரத்தினம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, வையப்பமலையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியா ளர்கள் சங்க நிர்வாகிகள் சண்முகம், என்.ஜோதி, பரமசிவம், சின்னசாமி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுடன் கலந்து கொண்டனர்.
உப்பின் அளவை கண்காணிக்க ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர்!
உப்பின் அளவை கண்காணிக்க ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர்! ஈரோடு, நவ.22- பெருந்துறை சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அருகே உள்ள நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக் கும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், கசிவுநீராக வெளியேற்றப்பட்டு வரும், ஏற்கனவே மாசடைந்த நிலத்தடி நீரினை முற்றிலும் அகற்றி, சுத்திகரிப்பு செய்வதன் மூலமாக மட்டுமே சரிசெய்யப்படும். இதனை கருத்தில் கொண்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப் பட்டு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. ஏற்கனவே, நல்லா ஓடையில் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவீடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது தொடர் பாக வெளிப்படை தன்மை மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைப் பது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிப்காட்டின் இறுதியில் அமைந்துள்ள 6 ஆவது குறுக்கு சாலை பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக வெளியேறும் கசிவுநீரில் கலந்துள்ள உப்பின் அளவை தொடர்ந்து ஆன் லைன் மீட்டர் மூலமாக கண்காணிக்க டிடிஎஸ் மீட்டர் அமைப் பது என முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டிடிஎஸ் மீட்டர் அமைக்கும் பணிக்கு வெள்ளியன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். இந் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, சென்னி மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் சங்க அமைப்பு கூட்டம்
திருப்பூர், நவ.22- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் காங்கேயம் அமைப்பு கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் காங்கேயம் கிளை அமைப்பு கூட்டம் வெள்ளி யன்று காங்கேயத்தில் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பொன்ராம், மாவட்டச்செய லாளர் பி.மோகன் ஆகியோர் சிறப்புரையாற் றினர். இதில் காங்கேயம் கிளைத் தலைவராக என்.நவீன், செயலாளராக பி.சந்திரன் உள் ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு என தனி அறை ஒதுக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் வசதி செய்ய வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முடிவில் கோவை அரசு சட் டக் கல்லூரி மாணவி செளபர்ணிகா நன்றி கூறி னார்.
நேரடியாக சீசன் டிக்கெட் வழங்காமல் அலைக்கழிப்பு: சிஐடியு மனு
மேட்டுப்பாளையம், நவ.22- மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நேரடியாக சீசன் டிக்கெட் வழங்காமல் பயணிகளை அலைக் கழிப்பு செய்கிற நிலையில், நேரடியாக சீசன் டிக்கெட் வழங் கிட வேண்டும் என சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தி னர் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் கல்வி அறிவு குறைவாக உள்ள முதிய வர்கள், தொழிலாளர்கள் பெண்கள் மாதாந்திர சீசன் டிக் கெட் பெறுவதில் பல மாதங்களாக சிக்கல் தொடர்கிறது. கைப்பேசி செயலி மூலமாகத்தான் டிக்கெட் எடுக்க வேண் டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் விலையுள்ள ஆண்டராய்டு போன் வைத்திருப்ப வர்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் எடுக்க முடியும் என்று எளிய மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ரயிலில் பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு செல்போன் பள்ளிக்கூடங்களில் அனுமதி இல்லை. இதனால் தினசரி டிக் கெட் எடுத்துச் செல்ல வேண்டிய கடினமான சூழ்நிலை உள் ளது. இதனால் சராசரியாக மாதாந்திரம் ஏழை எளிய நடுத்தர மக்கள் கணிசமான தொகையை செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் கோவை, போத்தனூர் காரமடை, பெரிய நாயக்கன் பாளையம், துடியலூர் போன்ற ரயில்நிலையங்களில் மாதாந் திர சீசன் டிக்கெட் வழங்குகின்றனர். ஆனால், மேட்டுப் பாளையம் ரயில் நிலையத்தில் போதிய ஊழியர்கள் இல் லாததை காரணம் காட்டி, ரயில்வே சீசன் டிக்கெட் UTS கைபேசி செயலி மூலமாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என அலைகழிக்கப்படுகின்றனர். ரயில்வே நிர்வாகத்தால் பயணிகள் அலைகழிக்கப்படுவதை உணர்ந்த சிஐடியு மேட் டுப்பாளையம் பொதுத்தொழிலாளர் சங்கத்தினர், ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப் போல, சீசன் டிக்கெட் நேரில் வழங்கிட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
நெல்லுக்கு காப்பீடு செய்ய அவகாசம் நீட்டிப்பு
சேலம், நவ.22- பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவ காசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் வேல்முருகன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாரத பிரதம ரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பெத்த நாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஏராளமானோர் இழப்பீடு பெற்றுள்ளனர். நடப்பு பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு, பாரத பிரதமர் நெல் காப் பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வரும் நவ.30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட் டிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிட் டுள்ள விவசாயிகள், நில கணினி சிட்டா, அடங் கல், ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத் துடன் அருகே உள்ள இ - சேவை மையங்க ளுக்கு சென்று ஏக்கருக்கு ரூ.550 மட்டும் காப் பீட்டு தொகை செலுத்தி, காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேட்டைத்தடுப்பு காவலர் பணி தனியாருக்கா? முத்தரசன் கண்டனம்
கோவை, நவ.22- வேட்டைத்தடுப்பு காவலர் பணி தனி யார் வசம் ஒப்படைக்கும் செயல் வன் மையான கண்டனத்திற்குரியது என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வனத்துறையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்கள் முறையிட்டு வருகின்றனர். அதன்படி முதுமலை, மேகலை, களக் காடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த வேட்டைத்தடுப்பு காவலர் கள் கோவை மாவட்ட வன அலுவல கத்தில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவ லர் ராமசுப்பிரமணியத்திடம் வேட்டைத் தடுப்பு காவலர் பணியை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என கோரிக்கை விடுத்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மாவட்ட வன பாது காப்பு அலுவலரை சந்தித்து வேட்டைத் தடுப்பு காவலர்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வேட்டைத்தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள்; குறிப் பாக பழங்குடியின மலைவாழ் பகுதி யைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் தமி ழக அரசு இந்த பணியை தனியாரிடம் ஒப் பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்ட மிட்டு வருவது ஏற்புடையதல்ல. அவ் வாறு செய்யும் பட்சத்தில் இவர்களுக் கும் வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். உடனடியாக தமி ழக அரசு இந்த போக்கை கைவிட வேண் டும், என்றார்.