மேட்டுப்பாளையம், நவ. 22- துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசா யன புகையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டி, மேட்டுப்பாளையம் பகுதி மக் கள் வெள்ளியன்று ஆலையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 7 ஆவது வார்டு பகு தியில், குடியிருப்புகள் நிறைந்த சத்திய மூர்த்தி நகரின் அருகே அமைந்துள்ளது யுனைட்டட் பிளீச்சர்ஸ் லிமிடெட் (யு.பி.எல்) என்னும் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனி யார் தொழிற்சாலை. இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் புகை இப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடும் பாதிப்பை உருவாக்கி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன புகை காற்றில் கலந்து கடும் துர்நாற்றத்தை உருவாக்குவதோடு, ஆலையை சுற்றி வசிக்கும் மக்களின் உடல் நலனுக்கு பல்வேறு பாதிப்புகளை உரு வாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆலையின் புகை காற்றை மாசடைய வைத்து இதனை சுவாசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல்,கடுமையான தலைவலி, தலை சுற்றல், வாந்தி மயக்கம் என ஆலையை சுற்றி யாருமே வசிக்க இயலாத சூழல் நிலவு வதாகவும் இதில் குழந்தைகள், வயதானோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்து சத்தியமூர்த்தி நகர் பகுதி மக் கள் இன்று ஆலையை முற்றைகையிட்டு கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை அதிகாரி கள் “இப்பிரச்சனை குறித்து விரிவான விசா ரணை நடத்த வரும் திங்களன்று மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற் றும் இப்பகுதி மக்கள் இணைந்து கலந்தாய் வு கூட்டம் நடத்தப்படும் என்றும் இக்கூட்டத் தில், அரசு அதிகாரிகள் மற்றும் இப்பகுதி பொதுமக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வ லர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்” என உறுதியளித்தனர். இதனால் சமாதானம டைந்த போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற னர்.