districts

திருச்சி முக்கிய செய்திகள்

நாய் கடித்த சிறுவனுக்கு உடனடி சிகிச்சை முதலமைச்சர், அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்

திருச்சிராப்பள்ளி,ஜன.5- திருச்சி மாவட்டம், சமயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்து றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிறன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள செவிலி யர்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவை கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்த போது, ஒரு சிறுவன் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளான். அவருக்கு உடனடியாக சமய புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏஆர்வி என்று சொல்லக்கூடிய நாய்க்கடிக்கான தடுப்பூசி செலுத்தப் பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 7.5.2021  இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் ஏஎஸ்வி, ஏஆர்வி என்று சொல்லக் கூடிய பாம்புக்கடி மற்றும் நாய்க்கடிகளுக்கான தடுப்பூசி கள் கையிருப்பில் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுகிறது. கடந்த கால ஆட்சிக்காலத்தில் பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களுக்கு  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றுதான் சிகிச்சைகள் வழங்க முடியும். இந்தநிலை தற்போது மாறியுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் வழங்க ஏதுவாக இந்த ஆட்சி மருத்துவத் துறையை கட்டமைத்துள்ளதற்காக பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். 

நீர்நிலை பாதுகாவலர் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

கரூர்,ஜன.5- தமிழ்நாடு முதலமைச்சரின் நீர் நிலை பாதுகாவலர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வரும் செயல்பாட்டா ளர்களை கௌரவிக்கவும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்திடவும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒருவர் என, 38 பேருக்கு, “மாண்புமிகு முதல மைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் ” விருதும், ரூ.1 இலட்சம் ரொக்கப்பரி சும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்த விருதிற்கு கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறு வனங்கள், சமூக அமைப்புகள், தமிழ்நாடு விருதுகள் (TN Awards)(http://awards.tn.gov.in)  வலைதளம் மூலம் வருகின்ற 02.01.2025 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.01.2025 ஆகும் என்று கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல்  தெரிவித்துள்ளார். இவ்விருது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்  http://www.environ ment.tn.gov.in/ மற்றும்  https://tnclimate changemission.in/home/ஆகிய வலை தளங்களில் ஆகிய வலைதளங்களில் பதி விறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கூடிய நபர்கள் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச பணிகளை செயல்படுத்தியுள்ளனரோ, அம் மாவட்டத்தி னைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வெண்டும். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்க ளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும்பட்சத்தில், ஒரு மாவட்டத்தின் சார்பாக சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். “தமிழ்நாடு விருதுகள்  (TN Awards)” (http://awards.tn.gov.in) இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணைய வழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது. இவ்விருது குறித்த மேலதிக விபரங்க ளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை, எண்1, ஜீனிஸ்சாலை,  சைதாப்பேட்டை, சென்னை – 600 015 தொலைபேசிஎண்: 044 – 24336421 மின்னஞ்சல் முகவரி: : tnclimate changemission@gmail.com வலைதளம்: :http://www.environ ment.tn.gov.in/ மற்றும் https://tnclimatechangemission.in/