மயிலாடுதுறை, ஏப்.10- மயிலாடுதுறை மாப்படுகையை சுற்றியுள்ள நகராட்சிக்குட்பட்ட பகுதி களை சேர்ந்த 20 ஆயிரம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிட்டப்பா பாலம் அருகில் உள்ள சுடுகாட்டில் கருமாதி மண்டபம் கட்டக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் தொடந்து போராட் டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து கட்டிடம் கட்டுவதற் கான கட்டுமானப் பணிகள் துவங்கிய நிலையில், பாஜக-வின் முன்னாள் எம். எல்.ஏவும் தற்போது திமுகவில் உள்ள ஜெ.வீ என்கிற ஜெகவீரபாண்டியன் பணிகளை தனது அதிகாரத்தை பயன் படுத்தி பணியை தடுத்து நிறுத்திய தோடு, சுடுகாட்டில் அடிப்படை வசதி களை செய்யவிடாமல் தடுத்து, அந்த இடத்தையும் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதனிடையே கட்டுமானப் பணியை துவங்கிடக் கோரி மார்ச் 18 அன்று சிபிஎம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கருமாதி செய்யும் போராட் டத்தை அறிவித்து போராட்டம் நடை பெற்றது. இந்நிலையில், பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்திற் குள் கட்டுமானப் பணியை துவக்கிவிடு வதாக எழுத்துப்பூர்வமாக உத்தர வாதம் அளித்தனர். ஆனால், 20 நாட் களை கடந்த பின்னரும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜெகவீரபாண்டியனுக்கு ஆதர வாகவே செயல்பட்டு வருகின்றனர்.
சிபிஎம் சார்பில் முற்றுகை போராட்டம்
இதையடுத்து சிபிஎம் சார்பில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட் டம் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் திங்களன்று நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவிச் சந்திரன், நகரச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாரியப்பன், டி.சிம்சன், ஏ.ரவிச்சந்தி ரன், சி.விஜயகாந்த், ஜி.வெண்ணிலா, கே.பி.மார்க்ஸ், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், ஆர். ரவீந்திரன், ஏ.அறிவழகன், டி.வன ரோஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கணேசன், இயற்கை விவசாயி ராமலிங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எம்.மணி, விவ சாயிகள் சங்க பாலகிருஷ்ணன், நாரா யணபுரம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பாலையா, அவையாம்பாள் புரம் குடியிருப்போர் நல சங்கம் செய லாளர் துரையரசன், சமூக செயற்பாட் டாளர் இரா.கெங்காதரன் மற்றும் கட்சி யின் ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர் கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து அறிந்து வந்த அதிகாரிகள் சிபிஎம் தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், 1 வாரத்திற்குள் பணிகள் தடை பட்டுள்ள அதே இடத்திலேயே கரு மாதி மண்டபப் பணிகளை துவங்குவ தாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.