மயிலாடுதுறை, ஆக.27- ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என மயிலாடுதுறை யில் நடந்த தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4 ஆவது மாநில மாநாடு சனியன்று மயிலாடுதுறை திரு விழந்தூர் ஏவிசி மண்டபத்தில் தோழர் எம்.ஆர்.அப்பன் வளாகத்தில் நடைபெற் றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் நெ.இல.சீதரன் தலைமை வகித்தார். மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவரும், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நாகை மாலி வரவேற்று பேசினார். தமிழகம் முழுவதிலுமிருந்து 600 க்கும் மேற்பட் டோர் மாநாட்டு பிரதிநிதிகளாக பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத்தலைவர் மு.அன்பரசன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார்.அஞ்சலி தீர்மானத்தை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கி. இளமாறன், செயலாளர் அறிக்கையை பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி , நிதி நிலை அறிக்கையை பொரு ளாளர் ந.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாசித்தனர். அறிக்கையின் மீது பிரதி நிதிகள் விவாதத்திற்கு பிறகு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மே ளனத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ குமார், தலைவர் அசோக் தூல் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி உரை யாற்றினர். மாநிலத்துணைத்தலைவர்கள் த. குப்பன்,பா.இராமமூர்த்தி,கோ.சுந்தர மூர்த்தி, மாநில செயலாளர்கள் குரு.சந்திரசேகரன், எஸ்.ஆறுமுகம்,இரா.மனோகரன், ம.நாதன் ஆகியோர் தீர்மா னங்களை முன்மொழிந்தனர்.
நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்கிட வேண்டும். தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதிய மாற்றத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய 21 மாத ஓய்வூதிய நிலு வைத்தொகையினையும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடக்கப் பட்டு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவை தொகைகளையும் உடன் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளில் சஸ் பெண்ட் செய்யக்கூடாது.தேர்தல் காலத் தில் வாக்குறுதி அளித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் அனைவருக் கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநிலதுணைத்தலைவர் பி.சுகுமா றன், வரவேற்புக்குழு செயலாளர் வி. பழனிவேலு ஆகியோர் நன்றி கூறினர்.