திருச்சிராப்பள்ளி, ஆக.1 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புள்ளம்பாடி ஒன்றிய மாநாடு புள்ளம்பாடி ஆர்.ஐ.மினி ஹாலில் நடந்தது. மாநாட்டிற்கு சங்க ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநாட்டில் முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணைத்தலைவர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர் வினோத்குமார், ஒன்றிய பொருளாளர் சதாசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புள்ளம்பாடி ஒன்றிய பகுதியில் பருத்தி ஆலை அமைக்க வேண்டும். டால்மியா சிமெண்ட் நிறுவனம், டால்மியர் செராமிக் நிறுவனத்திலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்பில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2400 வாக்குகள் கொண்ட வடுகர் பேட்டையை தனி பஞ்சாயத்தாக தரம் உயர்த்த வேண்டும். புள்ளம்பாடி பேரூராட்சியில் உள்ள எஸ்சி, எஸ்டி வாக்கை பட்டியலின தனி வார்டாக அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத் தலைவராக வி.வினோத், ஒன்றிய செயலாளராக எஸ்.ஏ.ஜார்ஜ், ஒன்றிய பொருளாளராக எஸ்.மீனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.