மயிலாடுதுறை, செப்.4 - மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் 17.9.2022 அன்று பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தி யடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோ ரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றி தழ் வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாண வர்கள் அனைவருக்கும் 17.9.2022 அன்று பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2 ஆம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்ப டும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தேர்வு செய்து ஒவ்வொரு வருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக் கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்ற றிக்கை அனுப்பி, முதற்கட்டமாகப் பள்ளி களிலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர் எனத் தேர்வு செய்து மாண வர்களை அனுப்பி வைத்தல் வேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் மயி லாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 17.9.2022 அன்று நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாண வர்கள் பிற்பகல் 2 மணிக்கும் வருகையை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் அறிவித்துள்ளார்.