பொன்னமராவதி, ஜூலை 17-
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிறைவுற்ற நிலையில், படிப்படியாக தக் காளி விளைச்சல் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் தற்போது தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.100, 110, 120, 140 என தினமும் விலை ஏறிக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், புதுக் கோட்டை மாவட்டம் பொன் னமராவதியில் உள்ள தனி யார் வணிக நிறுவனம், கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க் கும், பெல்லாரி வெங்காயம் கடைகளில் 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், இங்கு ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர்.
இப்பகுதி மக்கள் பயன் பெற வேண்டும் என்ற சேவை எண்ணத்தில் பொன்னமரா வதி சுற்றுவட்டாரப் பகுதி களில் காலை ஆயிரம் பேர், மாலை ஆயிரம் பேர் என தின மும் 2000 பேருக்கு, நாள் தோறும் மலிவு விலையில் விற்பனை செய்கின்றனர். இதனை பெறுவதற்காக பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்தக் கடை யில் நீண்ட வரிசையில் நின்று தக்காளி, வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.