திருச்சிராப்பள்ளி, மே 7- திரை நடன கலைஞர்கள் புதிய கிளை துவக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள டிவிலைட் டான்ஸ் ஸ்டுடியோ நடன அரங்கில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு ட்விலைட் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனர், நடன இயக்குனர் பிரதாப் தலைமை தாங்கினார். தமுஎகச மாநகர செயலாளர் சிவ.வெங்கடேஷ் நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். மாவட்டச் செயலர் வழக்கறிஞர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் இளங்குமரன் வாழ்த்துரை வழங்கினார். கிளையின் தலைவராக பிரதாப், செயலராக லாரன்ஸ், பொருளாளராக சந்துரு, துணைத் தலைவர்களாக பிரின்சி, நிரஞ்சன், துணை செயலர்களாக விஜய், தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.