மயிலாடுதுறை, ஆக.13 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள மருதம்பள்ளம் கிராமத்தை சுற்றி விவசாயத்தை பாழாக் கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள மணல் குவாரி களை மூடக் கோரி மருதம் பள்ளத்தில் சனிக்கிழமை தொடர் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் யூ.சண்முகம் தலைமை வகித்தார். சங்கத் தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட தலைவர் டி.சிம்சன், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி. ஸ்டாலின், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் கே.பி. மார்க்ஸ், ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீ.எம். சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பி.தெட்சி ணாமூர்த்தி, எம்.சுதாமன், ஒன்றிய துணை தலைவர் பி.வி.ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பி.செல்வராஜ், ஜி. கருணாநிதி, ஒன்றிய பொரு ளாளர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். மண் வளத்தை நாசமாக் கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதை தடுத்திட வேண்டும். டெல்டா பகு தியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தும், விவசாய நிலங்களில் மணல் குவாரி அமைப்பதை தடுக்க வேண்டும். மருதம்பள்ளம் ஊராட்சியை சுற்றியுள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கண்டன முழக்கமிட்டனர். பின்னர் அதிகாரி கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்கா லிகமாக போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.