புதுக்கோட்டை, ஜூலை 24 - ஏழை, எளிய மாணவர் களின் குடும்பங்களை வாட்டி வதைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கறம்பக் குடியில் சனிக்கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஏ.சந் தோஷ்குமார் தலைமை வகித்தார். துணைச் செய லாளர் பி.நிதிஷ்குமார் கொடி யேற்றினார். ஏ.பாலாஜி அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்த னன் எதிர்காலத் திட்டமிடல் குறித்து பேசினர். மாநாட்டை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாரா யணன் பேசினார். புதிய நிர்வாகிகளை அறி முகம் செய்து மாநில துணைச் செயலாளர் ஜி.அர விந்தசாமி பேசினார். மாநாட்டில் தலைவராக ஏ.சந் தோஷ்குமார், செயலாள ராக எஸ்.ஜனார்த்தனன், துணைத் தலைவர்களாக வசந்தகுமார், பிரியங்கா, துணைச் செயலாளர்களாக பாலாஜி, கார்த்திகாதேவி உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக ஆர்.லக்சாகினி வரவேற்க, ஏ.அன்பழகன் நன்றி கூறி னார். ஏழை-எளிய மாணவர் களின் குடும்பங்களை வாட்டி வதைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண் டும். கீரனூரில் அரசு பொறி யியல் கல்லூரி தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை யும், கட்டமைப்பு வசதிகளை யும் மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.