தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் வணிகவி யல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறை சார்பாக மாணவர்கள் இணைந்து மார்க்கெட்டிங் பெஸ்ட் - 2025 என்ற விற்பனை திருவிழாவை புதன்கிழமை நடத்தினர். இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் தங்கராஜ் வாழ்த்திப் பேசினர். தஞ்சை மூத்த பல்மருத்துவர் எஸ்.ரேகா ராஜ்மோகன் கலந்து கொண்டு விற்பனைத் திருவிழாவை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாணவ, மாணவியர் உணவுப் பொருட்கள், ஆபரண ஒப்பனைப்பொருட்கள், இயற்கை நுகர்வுப் பொருட்கள், பழச்சாறுகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து, சந்தை மேலாண்மை திறமையை நிரூபித்தனர். முன்னதாக வணிக மேலாண்மைத்துறை தலைவர் டி.வித்யா வரவேற்றார். நிறைவாக வணிகவியல் துறைத் தலைவர் கு.செந்தில் குமார் நன்றி கூறினார். ஏற்பாடு களை வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறை பேராசிரியர்கள், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.