கரூர், ஜன.29 - மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதை எதிர்த்து கரூரில் சாலைப் பணி யாளர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணி யாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஜன.20 முதல் 28 வரை மக்கள் சந்திப்பு கையெ ழுத்து இயக்கம் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அரவக்குறிச்சி பேருந்து நிலையம், வாரச் சந்தை அருகே நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் செவந்த லிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கத்தில் அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.செல்வராணி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ராஜ மாணிக்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உட்கோட்ட பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.