திருச்சிராப்பள்ளி, ஏப். 3 - 4 மாநிலத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஒன்றிய ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு விலையை நாள்தோறும் ஏற்றி வரு வதை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக் கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் அம்மா மண்டபத்தில் பகுதிக் குழு உறுப்பினர் வீரமுத்து தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜா, பகுதிக் குழு செயலாளர் தர்மா ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாம்பழச் சாலையில் பகுதிக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, கொள்ளிடம் செக்போஸ்ட் அருகில் பகுதிக்குழு உறுப்பினர் ரகுபதி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறையூர் பகுதிக்குழு சார்பில் குறத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் மௌலானா தலைமை வகித்தார். பகுதிக் குழு செய லாளர் சந்திரபிரகாஷ் கண்டன உரை யாற்றினார். அரியமங்கலம் பகுதிக் குழு சார்பில் கல்லணை ரோடு அருகில் உள்ள பெட் ரோல் பங்க் முன்பு தனபால் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.சி. பாண்டியன் கண்டன உரையாற்றினார். திருவெறும்பூர் கைலாஷ்நகர் பெட் ரோல் பங்க் முன்பு நல்லையா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா கண்டன உரையாற்றினார். பழைய பால் பண்ணை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு பகுதிக்குழு உறுப்பினர் சார்லஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செல்வி கண்டன உரை யாற்றினார். அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் பஞ்சப்பூர் பெட்ரோல் பங்க், எடமலைப் பட்டிபுதூர் பெட்ரோல் பங்க் முன்பு பகுதிச் செயலாளர் வேலுச்சாமி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதூர் கடைவீதியில் சதாசிவம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி குழு செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்ட னர்.
கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிலிண்டருக்கு பாடை கட்டி பெண்கள் சுமந்து செல்லும் நூதன போராட்டம், சிஐடியு சார்பில் ஆட்டோ-இருசக்கர வாகனத்தை கயிறு கட்டி இழுத்து வரும் போராட்டம், கும்பகோ ணம் உச்சிபிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து காந்தி பார்க் அருகே நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, மாநகர மாமன்ற உறுப்பினர் செல்வம், மாதர் சங்க பொறுப்பாளர்கள் தனலட்சுமி, சுமதி, ஜோதி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ராஜகோ பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.