குடவாசல், நவ.1- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தின் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் மாநில மைய முடிவின்படி சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்க பேரவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி யை தமிழக முதல்வர் நிறைவேற்ற கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்க பேர வைக்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.கற்பகம், செயலாளர் எஸ்.கோதை யம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வெற் றிச்செல்வி, அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை ஆற்றினர். கையெழுத்து இயக்கத்தின் நோக் கத்தை விளக்கி அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.பாலசுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் எஸ்.லதா மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக கத்தில் 150 பேர் கலந்து கொண்டனர். கை யெழுத்திட்ட கோரிக்கை மனு தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.