மயிலாடுதுறை, நவ.19 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் ஒன்றியத்தில் கனமழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கடந்த 4 நாட்களாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு வருகிறார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்க பங்கு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடி யிருப்பு பகுதி மற்றும் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன் பார்வையிட் டார். கனமழையால், திருக்கடையூர் ஊராட்சி ஓடக்கரை ரயிலடி தெரு பகுதி யில் மணிமேகலை-கலைவாணன் தம்பதியின் குடிசை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்துள்ளதை எம்எல்ஏ பார்வை யிட்டார். திருக்கடையூர் அமிர்தக டேஷ்வரர் ஆலயத்தின் பெயரில் தாங்கள் வசிக்கும் இடங்கள் உள்ளதால் அரசு வீடுகள், மின் இணைப்புகள் பெற முடியவில்லையென அப்பகுதி மக்கள் கூறினர். இதற்கு, எம்.எல்.ஏ நிவேதா முருகன் கோவில் நிர்வாகத்திடம் பேசி அனைவ ருக்கும் அரசு வீடுகளை கட்டித் தருவ தாகவும், மின் இணைப்புகளை உடனடி யாக செய்து தருவதாகவும் உறுதியளித் தார். பின்னர் நீஞ்சான்குளம் பகுதி யில் மிகவும் சேதமடைந்து பாழடைந்த நிலையிலுள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.