districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக! சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.15 - தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850-ஐ வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  நிர்வாகிகள் தனம், அன்சார் ஆகியோர் தலைமை  வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத் தலைவர் தங்கவேல், மாவட்ட துணைத்தலைவர் அமுதா ஆகியோர் பேசினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சத்துணவு  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீராசாமி, மாவட்ட  இணைச் செயலாளர் நாவலரசன், மாவட்ட இணை  செயலாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் வீராசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முருகையன், மாவட்டச்  செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் தமிழ ரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசம்
பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் லூர்து சாமி தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, அம்மாபேட்டை ஒன்றியப் பொருளாளர் கமலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய லாளர் முருகையன், ஓய்வுப் பெற்ற அரசு ஊழியர் சங்கம் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.