திருச்சிராப்பள்ளி, ஜன.10- திருச்சி மாவட்ட ஆட்சி யரகத்தில் முன்களப் பணி யாளர்களுக்கான மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி (பூஸ்டர் டோஸ்) திங்களன்று தொ டங்கியது. மாவட்ட ஆட்சி யர் சிவராசு தடுப்பூசியை செலுத்தி கொண்டு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கடந்த ஏப்.14 ஆம் தேதிக்கு முன்பாக இரண்டாவது தவணை செலுத்தியவர்க ளுக்கு, தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது. தற்போது 14,500 பேர் தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையங் களில் 6,397 படுக்கை வசதி கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வரும் தொற்றில் டெல்டா வைரஸ் இருப்பதால் நாம் கவன மாக இருக்க வேண்டும். பிரச் சனை ஏதும் இருந்தால் உட னடியாக அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் போதுமான அளவு உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களில் 75 சதவீதம் பேர் மாநகரிலும், 25 பேர் புற நகரிலும் வசிப்பவராக உள்ள னர். முகக் கவசம் அணி வதன் மூலம் பரவலை தடுக்க லாம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.