districts

img

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஊதியத்தை உடனே வழங்குக!

அறந்தாங்கி, மார்ச் 3-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி கடை வீதியில் தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி. தொ.ச. ஒன்றிய தலைவர் செல்லமுத்து, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா தலைமை வகித்தனர். வி.தொ.ச. எம். தர்மராஜ், இருதயராஜ், வி.ச. நிர்வாகிகள் சீனிவாசன், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 மாத கால ஊதியத்தை உடன் வழங்க வேண்டும். அறந்தாங்கி தாலுகா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 1433 பசலிக்கு இனப்படுதொகை உடனே வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்ட கூலி 319 குறைக்காமல் உடனே வழங்க வேண்டும். வேளாண் விலைப் பொருள்களுக்கு ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை சிறப்புரையாற்றினார்.  மேலும், வி.ச. மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி வி.தொ.ச மாவட்டச் செயலாளர் சலோமி, விச.. மாவட்ட துணைத் தலைவர் சி. சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வீரையா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, சிபிஎம் நகரச் செயலாளர் அலாவுதீன், வி.தொ.ச. ராசு, சிபிஎம் ஆன்லைன் ஆராய்ச்சியாளர் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.