திருச்சிராப்பள்ளி, மே 9 - திருச்சி மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை கட்டுப்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணி யிடங்கள் மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படை யில் நிரப்பப்பட உள்ளன. 12 ஆண்கள், 15 பெண்கள் நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு: 1.7.2022 தேதியில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 35, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவின ருக்கு 18 முதல் 32, இதரபிரி வினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் அனு மதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்ப டும். விண்ணப்பப் படிவத் தினை திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இரண் டாம் தளத்தில் அமைந் துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவல கத்தில் பெற்று, உரிய சான்று களின் நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டி அதனை சம்பந்தப்பட்ட அலு வலகத்தில் 30.5.2022 தேதிக் குள் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சி மாவட்டஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.