திருச்சிராப்பள்ளி, நவ.29 - உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரி டிச.2-இல் சுமைப் பணி தொழிற்சங்கங்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள னர். இதுகுறித்து சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வேஸ்ட் பேப்பர் கடை மற்றும் குடோன் களில் 42-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும். கூடுதல் சுமை (சுமார் 120 கிலோ வரை) தூக்கச் சொல்லி துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். சர்வ தேச தொழிலாளர் ஸ்தாபன (IL0) விதிப்படி 55 கிலோ எடையை தூக்க உத்தரவிடக் கோரி தொழிலாளர் உதவி ஆணையர் முன்பாக தொழில் தகராறு சட்டம் 1947 (2k)-ன்படி மனு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேற்படி வேஸ்ட் பேப்பர் குடோன் மற்றும் கடை முதலாளி கள் சிலர் மதுரை உயர் நீதிமன்றத்தில் யாரை வேண்டுமானாலும், வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என தொழிற் சங்கம், தொழிலாளர் துறையை மறைத்து உத்தரவு பெற்றுள்ளனர். மேலும் இதற்கு பாதுகாப்பு வழங்க தொழிலா ளர்கள் 7 பேரை பட்டியலிட்டு, அதற்கும் உத்தரவு பெற்றுள்ளனர். இந்த உத்தரவை காட்டி, ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் வெளி யேற்றி விட்டு, காவல்துறை பாதுகாப் போடு பீகார் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தொழிலாளர்களைச் சட்டத்திற்கு புறம்பாக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நவ.15 அன்று உள்ளூர் தொழிலாளிக்கு வேலை மறுத்து, பதிவு செய்யப்படாத வெளி மாநிலத் தொழிலாளர்களை வைத்து வேலை செய்து வருவதையும் அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கு வதையும் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திரண்டோம். அப்போது மேற்கு வட்டாட்சியர் தலையிட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி நவ.20 அன்று மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் கோட்டாட்சியர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிலாளர் ஆய்வாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், “ஏற்கனவே வேலை செய்யும் தொழிலாளர்களில் 7 பேரை மட்டுமே வெளியேற்ற வேண்டும். மற்றவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். தொழிலாளர்கள் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் WP(MD) 26086 என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்றம் சென்று பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். போலீஸ் பாதுகாப்பு தரக் கூடாது. பழைய நிலையே தொடர வேண்டும்” என முடிவெடுத்து அறிவிக்கப் பட்டது. இதை ஏற்காமல் சென்ற முதலாளிகள், உள்ளூர் தொழிலாளர்களை துரத்தி விட்டு, மீண்டும் வெளி மாநிலத் தொழி லாளர்களை கொண்டு வந்து போலீஸ் பாதுகாப்போடு வேலை செய்து வருகி றார்கள். இதுகுறித்து கேட்ட போது, உயர்நீதிமன்ற குற்றவியல் வழக்கறி ஞரின் உத்தரவுபடிதான் பாதுகாப்பு கொடுக்கிறோம் என திருச்சி மாநகர காவல்துறை சொல்கிறது. மாவட்ட நிர்வாகமும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் வெளியாட்களை அனுமதிப்பது, காவல்துறை பாதுகாப்பு தருவது தவறானது. காவல்துறையினர் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல் படுவதை கண்டித்தும் தமிழக அரசு தலையிடக் கோரியும் டிசம்பர் 2 அன்று காலை 10 மணிக்கு அனைத்து தொழிற் சங்க கூட்டுக் குழு சார்பில் சுமைப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து மாவட்ட ஆட்சியரகத்தில் “கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்” நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.