states

‘பெங்கல்’ இன்று புதுவையில் கரை கடக்கிறது!

சென்னை, நவ. 29 - தென்மேற்கு வங்கக் கடலில், நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளியன்று (நவ.29) பிற்பகல் 2.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறியது.  இதனால், தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பெங்கல் புயல் தற்போது, திரி கோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவிலும், நாகப் பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள் ளது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமையன்று (நவ. 30) பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்ல புரத்துக்கும் இடையே புதுவை அருகே புயலாகவே கரையைக் கடக்கக் கூடும். அச்சமயத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் புயல் காரணமாக சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் அதி கனமழை வரை யும் பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சா வூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப் பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் கடலூர் துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.7ம் நம்பர் புயல் எச்ச ரிக்கை கூண்டு என்பது துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப் படுவதைக் குறிப்பதாகும்.