states

மோடி அரசின் பிடிவாதம் : டிச. 2 வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதுதில்லி, நவ. 29 - அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மோடி அரசு பிடிவாதமாக மறுத்து வருவ தால், நாடாளுமன்றத்தின் இரு அவைக ளும் 4-ஆவது நாளாக முடங்கின. அதானியின் ரூ. 6,300 ஆயிரம் கோடி முறைகேடு, ரூ. 2,029 கோடி லஞ்ச  விவகா ரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை, சம்பல் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின்றன. இதுதொடர்பாக மக்களவை சபா நாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவ ரிடம் நோட்டீஸ்களையும் அளித்து வரு கின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசானது, இப்பிரச்சனைகளை விவாதிக்காமல் அஞ்சி ஓடி ஒளிந்து வருகிறது. நாடாளுமன்றம் வரும் பிரதமர் மோடி, அவைக்குள் வந்து எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக இல்லை. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கி 3 நாட்களாகியும் அவை அலுவல்கள் நடைபெறவில்லை. இந்நிலை யில், மோடி அரசின் பிடிவாதத்தால் நான்கா வது நாளாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. வெள்ளியன்று காலை 11 மணிக்கு மக்க ளவை கூடியதும் அதானி விவகாரத்தை விவாதிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிடவே, சபாநாயகர் ஓம் பிர்லா பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார். 12  மணிக்குப் பிறகும் எதிர்க்கட்சிகளின் போ ராட்டம் தொடரவே டிசம்பர் 2 வரை மக்க ளவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, மாநிலங்களவையிலும், அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து விட்டு விதி 267ன் கீழ் அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் அளித்திருந்த 17 நோட்டீஸ்களையும் மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர்  தள்ளுபடி செய்தார். இதனால் ஆவேசம டைந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால், முதலில் 12 மணி வரை யும் பின்னர், டிசம்பர் 2 வரையும் நாடாளு மன்றம் ஒத்திவைக்கப்பட்டது.