திருப்பூர், நவ.29- சொத்து வரி உயர்வுக்கு எதிராக போரா டிய மாமன்ற உறுப்பினர்கள் மீது, அத்துமீறி நடந்து கொண்ட தெற்கு காவல் நிலைய ஆய் வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து கட்சியினர் மாநகர காவல் ஆணை யரை சந்தித்து வெள்ளியன்று மனு அளித்த னர். திருப்பூர் மாநகர் அனைத்து கட்சி நிர்வாகி கள் கூட்டம் வெள்ளியன்று இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் தலைமை வகித் தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, இந் திய தேசிய காங்கிரஸ் வி.ஆர் ஈஸ்வரன், கொங் குநாடு தேசிய மக்கள் கட்சி ரோபோ ரவிச்சந் திரன், மதிமுக சு.குமார், விசிக எ.பி.ஆர் மூர்த்தி, மனித நேய மக்கள் கட்சி நஸுருதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அப்பாஸ் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதில், சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராடிய மாமன்ற உறுப்பினர்கள் மீது, அத்துமீறி நடந்து கொண்ட காவல் ஆய்வா ளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் வலியுறுத்து வது; அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்து வரி உயர்வை திரும் பப்பெறக்கோரி தொழில் அமைப்புகள் உள் ளிட்ட அனைத்து தரப்பினரையும் இணைத்து, வேலை நிறுத்தப் போராட்டம் உட்பட தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய் யப்பட்டது. அதன்படி, மாலை மாநகர காவல் ஆணை யர் லட்சுமியை சந்தித்து சொத்து வரி உயர் வுக்கு எதிராக போராடிய மாமன்ற உறுப்பினர் கள் மீது, அத்துமீறி நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக் கக்கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்று கொண்ட காவல் ஆணையர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.